அண்ணன் ஜாக்கியிடம் இருந்து பதில் வரும் என்று ஆசை ஆசையாய் எழுதியது ( Mon, Jan 24, 2011 ) ஆனால் எந்த பதிலும் வரவேயில்லை , பரவாயில்லை எல்லோருக்கும் பதில் தருவதற்கு அண்ணனுக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம் , அல்லது பதில் தரும் அளவிற்கு என்னுடைய கடிதம் இல்லாமல் இருக்கலாம் . நன்றி
*****************
இதோ கடிதம்
நண்பரே வணக்கம்
நான் உங்கள் தளத்தை தினமும் படிக்கும் வாசகன் இல்லை , ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும்போதும் , தளத்திற்கு வந்து மௌஸ் உபயோக படுத்தி மேலிருந்து ஒரு முறையும் ,கீழிருந்து ஒரு முறையும் மட்டும் பார்த்து விட்டும் செல்வேன் ,நான் உங்கள் தளங்களில் அதிகம் படிப்பது உங்களை பற்றி நீங்கள் எழுதியிருக்கும் "என்னை பற்றி" , மற்றும் உங்கள் தளத்தை பற்றிய விரிவாக்கமும் தான் , உங்களுடை ஸ்டைல் மிக அருமை ,
உங்களுடைய சினிமா மீதான காதல் மீது எனக்கு மிகுந்த மரியாதையை உண்டு , விரைவில் உங்கள் கனவு செயலுக்கு வர எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறான் ,
(ஜாக்கி சேகர் :
தம்பி , யாருப்பா நீ ? இவ்ளோ நல்லவனா இருக்கியே ? ஏன் இந்த பில்ட் அப் ? உனக்கு என்ன வேண்டும் ?, நீ சொல்ல வருவது தான் என்ன?,
நான் : உங்கள் mind வாய்ஸ் எனக்கு கேட்டுவிட்டது ?
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன் , அந்த படத்தின் பெயர் poweder , ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அருமையான படம் , மனிதனிடம் உள்ள சக்தி யை பற்றிய படம் ,இதற்கு மேல் படத்தை பற்றி பில்ட் அப் வேண்டாம் , சிறந்த படைப்பு என்றுமே மகளிடம் போய் சேர வேண்டும் என்பதால் , உங்களின் மூலம் அது சாத்தியம் என்பதாலும் இந்த கடிதம் .
Powder (1995)
111 min - Drama | Fantasy | Mystery - 27 October 1995 (USA)
6.2/10
Users: (11,316 votes) 138 reviews | Critics: 33 reviews
A young bald albino boy with unique powers shakes up the rural community he lives in.
Director: Victor Salva
Writer: Victor Salva
Stars: Mary Steenburgen, Sean Patrick Flanery and Lance Henriksen
(என்னிடம் படம் இல்லை , கிடைத்தவுடன் உங்களுக்கு அனுப்புகிறான் ,நீங்கள் இணையத்தில் எங்காவது டவுன்லோட் செய்து தான் பார்க்க வேண்டும் )
(நான் அலுவலகத்தில் உள்ளபடியால் என்னுடைய வலை பூவிற்கு கூட இவ்வளவு மெனக்கெட்டு எழுதுவது கிடையாது ,ஏதோ உங்களுக்கு இவ்வளவு பெரிய கடிதம் (என்னை பொறுத்துவரை ) எழுதியிருக்கிறேன் )
***********************************************************
என்னுடைய ஒரே திரை விமர்சனம்
http://karurkirukkan.blogspot.com/2010/07/blog-post_19.html
******************************************************************************
நன்றி
ஏதும் கடிதத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்
********************************
இப்படிக்கு
karurkirukkan.blogspot.com
(BEST VIEW IN THIS BLOG GOOGLE CHROME,FIREFOX)
2 Comments
நீங்க வந்து இங்க கமெண்ட்ஸ் போட்டது ரொம்ப சந்தோசம் , ஆறு மாதம் கழித்தும் என்னுடைய கடிதத்திற்கு பதில் வந்தது மிக்க மகிழ்ச்சி.