மதராசப்பட்டினம் - படம் ஆரம்பமே அசத்தலாக ஆரம்பிக்கிறது , ஹீரோ ஆர்யா வரும் முதல் காட்சி மிக அருமை , அந்த காட்சியிலேயே கதாநாயகிக்கு கதாநாயகன் மேல் காதல் உருவாக ஆரம்பமாக அமைந்து விடும் ,நாம் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு சென்னை யில் வாழும் சாதாரண துணி துவைக்கும் வாலிபனுக்கும் , வெள்ளைக்கார துரை யின் பெண்ணுக்கும் இடையே காதல் எப்படி உருவர்கி , அவர்கள் காதலை எப்படி இருவரும் வெளிப்படுத்துகிறார்கள் , கடைசியில் இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் , இதற்கு இடையில் இருவரது குடும்பம் மற்றும் அவர்களை சுற்றி இருப்பவர்களை சுற்றி கதை மிக அழகாக செல்லும் , சென்னை யில் வசிப்பவர்களும் , சென்னை யை நேசிப்பவர்களும் , காதலை நேசிப்பவர்களும் , எதார்த்தத்தை விரும்புவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் , சென்னை யை நாம் திரையில் பார்க்கும் போது உண்மையில் நம் மீது நமக்கு கோபம் வருகிறது , எவ்வளவு அழகாக இருந்தது சென்னை , அதை நாம் இப்படி ஆக்கி உள்ளோமே ? என்று ! , இந்த உணர்ச்சியை படம் பார்க்கும் அனைவர்க்கும் ஏற்படுத்தி இருக்கும் மதராசபட்டினம் திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் .
கதை மூன்று காலகட்டங்களில் நகரும் , அதை இயக்குனர் மிக லாவகமாக , மிக சுலபமாக கையாண்டு இருப்பார் , அனுபவம் உள்ள இயக்குனர்கள் கூட இந்த அளவுக்கு படத்தின் திரைகதையை கொண்டு போவது கடினம் , தொழில் நுட்ப காட்சிகள் மிக அருமை , படத்தின் காமெடி அதிகமாக இல்லை , அனால் நமக்கும் அந்த குறை தெரியாது !?
பொதுவாக இப்பொழுது வருகின்ற படங்களில் , கதாநாயகன் , கதாநாயகியை காதலிப்பார் , இருவரும் ஒன்று சேர்வதற்கு எடுத்துக்கொள்ளும் சிரத்தை தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் , ஆனால் இருவரிடையே உள்ள காதலை அழுத்தமாக சொல்ல மாட்டார்கள் , அவ்வாறு சொல்லாவிட்டால் நமக்கும் கடைசில் இருவரும் ஒன்று சேர இருவரும் போராடும் போது அதற்கான வலி நம்மிடையே இருக்காது ,
ஆனால் இந்த படத்தில் இருவருக்கும் இடையே உள்ள காதலை மிக அழகாக , கவிதை தனமாக , எதார்த்தமாக , சொல்லியிருப்பார்கள் !.
படத்திற்கு இசை மிக அருமை , பின்னணி இசை நம் மனதை வருடும் , சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு நம் சென்னை எப்படி இருந்தது என்று காண்பிக்க மிகவும் சிரத்தை எடுத்திருப்பார்கள் , சென்ட்ரல் ரயில் வண்டி நிலையம் அருகில் உள்ள ஆற்றில் படகில் செல்லும் காட்சிகள் , அந்த காலத்து ரயில் வண்டிகள் , வெள்ளைக்கார துரைகள் , அவர்களது உடைகள் , அனத்தும் மிக அருமை .இது போல இன்னும் எவ்வளவோ
பாராட்டப்பட வேண்டிய விசயங்களை உள்ளடகியுள்ளது மதராசபட்டினம் .
< மதராசபட்டினம் - சரித்திர காதல் >
பொதுவாக நான் திரைப்பட விமர்சனம் எழுதுவது கிடையாது , இதை எழுத காரணம் இது போன்ற முயற்சிகளை நாம் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் ...கண்டிப்பாக நீங்க எல்லோரும் ஒருமுறை கண்டிப்பாக பார்க்க வேண்டிய
படம்
என்னுடைய எழுத்துக்கு முதன் முதலில் அங்கீகாரம் கொடுத்து இந்த இடுகையை 22.07.2010 அன்று தினமணி , வலைபூ பட்டியலில் முதல் பக்கத்தில் பிரசுரத்திற்கு மிக்க நன்றி
7 Comments
regards
Ashok
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி