எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியாகிறது அவன் இவன் படம்


இதுவரை நான்கு படங்கள் முடித்திருக்கிறார் இயக்குநர் பாலா. சேது, நந்தா, பிதாமகன் மற்றும் நான் கடவுள். இந்த நான்கு படங்களுமே சாதாரணமாக ரிலீஸாகிவிடவில்லை.காத்திருப்பு, இழுத்தடிப்பு, தகராறு, பட்ஜெட் பிரச்சினை, தயாரிப்பாளர் கைமாறியது என தொடர்ந்து ஏகப் பிரச்சினைகளைச் சந்தித்த பிறகுதான் இவை ரிலீசாகியுள்ளன.ஆனால் முதல் முறையாக பாலாவின் படம் ஒன்று அவருக்கும் தயாரிப்பாளருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியாகிறது என்றால் அது அவன் இவன் படம்தான்.

இதனை பாலாவே இப்படிக் குறிப்பிட்டார், படத்தின் இசை வெளியீட்டு விழாவில்:

நான்கு படங்கள் இயக்கியுள்ளேன். எல்லா தயாரிப்பாளர்கிட்டயும் பிரச்சினைகளும், சண்டையும் ஏற்பட்டு இருக்கு. ஆனால் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. அதுவே பெரிய சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இருந்தது. கல்பாத்தி அகோரம் குழந்தை மனதுடையவர். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியதும் சரி, இந்தப் படத்தில் விஷாலை இன்னொரு ஹீரோவாக நடிக்க சம்மதிக்க வைத்ததும் ஆர்யாதான்.

இந்தப் படத்தில் இன்னொரு சிவாஜி கணேசனைப் பார்க்கலாம். அவர் ஜிஎம் குமார்.

யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றுவது மிக இனிய அனுபவம். என்னிடம் தொலைபேசியில் எல்லாம் கேட்டுக் கொண்டு, நேரில் போகும்போது அனைத்து வேலைகளையும் சரியாக முடித்து வைத்திருப்பார். எப்போதும் போல, பாலுமகேந்திராவுக்கு நன்றி. அவர் இல்லாமல் நான் இல்லை," என்றார்.

No comments: