ஆந்திராவில் அமைச்சர் ஒருவர் தன்னுடைய உதவியாளருக்கு அளித்த பரிசை கண்டு அனைத்து தரப்பினரும் கொந்தளித்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் காங்.,கட்சி ஆட்சி செய்துவருகிறது. கிரண் குமார் முதல்வராக கொண்டு இயங்கி வரும் அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்துவருபவர் சங்கர்ராவ். இவர் விழியங்கரம் மாவட்டத்தில் உள்ள போப்பிலி என்ற இடத்தில் நடந்த தொழில் துறை குறித்த கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சரின் மொபைல் போன் நீண்ட நேரமாக ஒலித்துக்கொண்டிருந்தது. போனை எடுத்து பதில் அளிக்க பக்கத்தில் உதவியாளர் யாரும் இல்லாததை கண்டு கோபத்தின் உச்சத்தில் அமைச்சர் இருந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த அமைச்சரின் <உதவியாளர் வெங்கடேஷ் என்பவர் போனை ஆன் செய்ய முற்பட்டார். ஏற்கனவே கோபத்தில் இருந்த அமைச்சர் வெங்கடேஷனைதகாத வார்த்தைகளால் திட்டியதுடன் இல்லாமல் அவருடைய முகத்தில் ஒரு குத்து விட்டார். விழாவில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.தொடர்ந்து உதவியாளர் சிகிச்சைக்காக பொதுமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நடந்து கொண்ட விதம் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் எதிர்கட்சியினர் அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அமைச்சரின் இச்செயல் ஆந்திராவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
0 Comments