ஒருநாள் கவர்னராக பதவி வகித்த 4 வயது சிறுவன்


அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன் ஜெஸ்சி சாக்ஷான். 4 வயது சிறுவனான இவன் தனது தாயுடன் காரில் வெளியில் சென்று இருந்தான். திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான்.

இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தான். உடனே, அவனது தாய், நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது.வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால், சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார்.இச்சம்பவம் அனைத்தும் “யூடியூப்” இணைய தளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பானது. அதை நியூஜெர்சி மாகாணத்தின் தற்போதைய கவர்னர் கிரிஸ் கிறிஸ்டி பார்த்தார். இதை தொடர்ந்து அச்சிறுவனின் ஆசையை தீர்த்து வைக்க விரும்பினார்.

ஆகவே அவனை நியூஜெர்ஸி மாகாணத்தின் ஒருநாள் கவர்னர் ஆக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் சிறுவன் ஜெஸ்சி சாக்சான் ஒரு நாள் கவர்னராக பதவி வகித்தான். இதை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.மேலும் தனது தம்பி கவர்னராக இருந்த ஆலிவுட் நடிகர் அர்னால்டு ஷ்வார்ஷ் னேஷரை போல தானும் கவர்னராக வேண்டும் என இதுபோன்று அழுது அடம் பிடித்ததாக பலத்த சிரிப்புக்கு இடையே கூறினார்.

“முதல்வன்” சினிமா படத்தில் நடிகர் அர்ஜூன் ஒருநாள் முதல்-அமைச்சராவது போல் நடித்து இருந்தார். ஆனால் அமெரிக்காவில் 4 வயது சிறுவன் உண்மையிலேயே ஒரு நாள் கவர்னராக பதவி வகித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான்

Post a Comment

0 Comments