வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்-சிங்கமுத்து

எனக்கும், வடிவேலுவுக்கும் சண்டை வரலைன்னாலும் நானே அங்கிருந்து விலகி வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும் வரிசையா செத்துக்கிட்டே இருந்தாங்க. இப்பகூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர் இறந்துட்டாரு. நானும் அவர் கூட இருந்திருந்தா செத்துருப்பேன் என்று நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரத்தில் உருக்கமாக கூறி வருகிறார்.

திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களமிறங்கி எதிர்க்கட்சியினரை... குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் வடிவேலு. வடிவேலுவில் அனல் கக்கும் ‌காமெடி பிரசாரத்துக்கு எதிராக விந்தியாவை களமிறக்கியது அதிமுக. ஆனாலும் அவரது பேச்செல்லாம் வடிவேலுவின் மாஸ் பேச்சில் எடுபடாமல் போனது. இதனால் வடிவேலுக்கு எதிராக பேசும் நேரடி சக்தியாக இருக்கும் சிங்கமுத்துவை நாடியது அதிமுக. போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்ததும் ஓடிப்‌போய் ஜெயலலிதாவை பார்த்த வடிவேலு, அடுத்த கனமே பிரசார களம் இறங்கினார்.

வடிவேலு தன் பிரசாரத்தின்போது பெரும்பாலும் விஜயகாந்தையை நைய புடைத்து வருவது போலவே, சிங்கமுத்து தன் பிரசாரத்தில் வடிவேலுவை நைய புடைக்க ஆரம்பித்து விட்டார். என்னவொரு வித்தியாசம் என்றால் வடிவேலுவின் பிரசாரம் காமெடி ரகம்; சிங்கமுத்துவின் பிரசாரம் சீரியஸ் ரகம். சென்னையில் நடந்த பிரசாரத்தில் சிங்கமுத்து பேசுகையில், புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு) வந்துள்ளார். அவரைப் பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர் விமர்சிக்கிறார். நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப நிதானமாய் இருப்பாய் என்று எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய். விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை, என்றார்.

இன்னொரு இடத்தில் சிங்கமுத்து பேசும்போது, வடிவேலு பேசுறதெல்லாம் நானும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்னத்தை சொல்றது? சொந்த பிரச்சனையை மனசுல வச்சுகிட்டு பேசுறது சரியா, நீங்களே சொல்லுங்க. அவருக்கும் விஜயகாந்துக்கும் ஏதோ பிரச்சனை. அதுக்காக திமுக மேடையை பயன்படுத்துறார்னுதான் தோணுது. அப்படியே பேசினாலும், ஒரே துறையில இருக்கிற அவரை இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிக்கறது சரியா படலை. அதுவும் அவரு விஜயகாந்த்தை அந்த பீஸ, இந்த பீஸ் என்று சொல்றதையெல்லாம் கேட்கவே கஷ்டமாதான் இருக்கு. எனக்கும் அவருக்கும் சண்டை வரலைன்னாலும் நானே அங்கிருந்து விலகி வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும் வரிசையா செத்துக்கிட்டே இருந்தாங்க. இப்ப கூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர் இறந்துட்டாரு. அந்தளவுக்கு பவர்ஃபுல் ஜாதகம் அவருக்கு. ஜாதகம்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. இந்தாளுக்கு இப்ப பாத சனி நடக்குது. ஒரு வழி பண்ணாம விடாது. தப்பு தப்பாதான் பேச சொல்லும். நடக்க சொல்லும். போக போக எல்லாரும் பார்க்கதானே போறீங்க. நான் இப்போது முப்பதைந்து படத்துல நடிச்சுகிட்டு இருக்கேன். வடிவேலுவுக்கு ஒரு படம் கூட இல்லை. அதான் நேரம்ங்கிறது, என்றார்.

Post a Comment

0 Comments