விக்கி லீக் இந்தியத் தகவல்கள் வெளியீடு

by 12:09 PM 1 comments

இந்திய வெளியுறவு விவகாரங்கள் குறித்த அமெரிக்க அதிகாரிகளின் மதிப்பீடுகள் அடங்கிய ஆவணங்களை உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விக்கிலீக்சிடமிருந்து பெற்று, அவற்றை பிரபல ஆங்கில நாளேடான இந்து வெளியிடத் தொடங்கியுள்ளது.
இந்தியாவிலிருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட 5,100 தந்திகளை தான் பெற்றிருப்பதாகவும், அவை அண்டைநாடுகள், ரஷ்யா, கிழக்காசியா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், கியூபா என்று பல்வேறு நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐக்கியநாடுகள் பேரவை உள்ளிட்ட அமைப்புக்கள் இவற்றுடனான இந்திய அரசின் உறவுகள் குறித்து விவாதிப்பதாகவும் இந்து கூறுகிறது.

இன்றைய ஆவணங்களில் பாகிஸ்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் மட்டும்தான் அந்நாட்டுடனான பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க விரும்பியதாகவும், மற்றவர்கள் மோதல் போக்கினை ஆதரித்த்தாகவும் அமெரிக்க தூதுவர் டிமோதி ரோமர் தனது தந்தியில் குறிப்பிடுகிறார்.

தன்னை முதல் முதலாக சந்திக்கும்போதே பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பிரதமரிடம் பாகிஸ்தானை அரவணைத்துச் செல்லவேண்டிய அவசியமிருக்கலாம், எங்களுக்கு அப்படியில்லை என்று கூறியதை தன்னிடம் நினைவுகூர்ந்தார் என ரோமர் கூறுகிறார். முதல் சந்திப்பிலேயே அப்படி அவர் கூறியது நாராயணனின் மனப்போக்கை மட்டுமல்ல, பாகிஸ்தானைப் பொறுத்தவரை மன்மோகன் தனிமைப்பட்டிருக்கிறார் என்பதையே அது வெளிப்படுத்தியதாக ரோமரின் தந்தி கூறுகிறது என்கிறது இந்து வெளியிட்டிருக்கும் விக்கிலீக்ஸ் ஆவணம்.

கேரள மாஃபியா

எம் கே நாராயணன் 2005 ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவிருந்த நேரத்தில் ஏற்கனவே பிரதமரின் முதன்மை ஆலோசகர் டிகேஏ நாயர் ஒரு கேரளக்காரர். இப்போது நாராயணன் வேறு இணைந்துள்ளார். மத்திய அரசு வட்டாரங்களில் இந்திபேசுவோர் ஆதிக்கமே அதிகம். அப்படி இருக்கும்போது பிரதமருக்கு மிக நெருக்கமான இடத்தில் கேரளத்தைச் சேர்ந்த இருவர் செயல்படுவது சற்று விநோதமாகவே மற்றவர்களுக்குப் படுகிறது என்றும், இவர்களை கேரள மாஃபியா என்றும் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தந்தி வர்ணிக்கிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பய் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எஃப்.பி.ஐ திரட்டிய தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாகவிருந்த்தாகவும், கடும் முயற்சிகளுக்குப் பிறகே அது இறங்கி வந்ததாகவும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன.

2006 ஜனவரியில் நிகழ்ந்த மத்திய அமைச்சரவை மாற்றங்களின் விளைவாக அமெரிக்க ஆதரவாளர்கள் முக்கிய பொறுப்புக்களுக்கு வந்திருப்பதாகவும், குறிப்பாக ஈரானிலிருந்து எரிவாயு தருவிப்பதற்காக பாகிஸ்தான் வழியே குழாய்கள் அமைப்பதில் தீவிரம் காட்டிய மணி சங்கர அய்யருக்கு பதிலாக முரளிதியோரா பெட்ரோலியத்துறை அமைச்சராக ஆக்கப்பட்டதில் அன்றைய அமெரிக்க தூதர் டேவிட் மல்ஃபோர்ட் வரவேற்றிருக்கிறார், மற்றும் சைஃபுத்தீன் சோஸ், கபில் சிபல், ஆன்ந்த் சர்மா ஆகியோரை அமெரிக்க ஆதரவாளர்கள் என்றும் மல்ஃபோர்டின் தந்தி கூறுகிறது.

இலங்கைக்கு ராடார்கள்

இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட ராடார்கள் விடுதலைப்புலிளின் வான்வழித் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை எனவே எங்களுக்கு இன்னமும் அதிநவீன ராடார்களைக் கொடுத்து உதவுங்கள் என இலங்கை அமெரிக்காவிடம் கோரியதாகவும், அதே நேரம் இந்தியாவிற்குத் தெரியாமல் அத்தகைய ஏற்பாட்டில் இறங்கக்கூடாது என இலங்கை ஒத்துக்கொண்டதாகவும் ஓர் ஆவணம் கூறுவதாக இந்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

2007ஆம் ஆண்டு மார்ச்சில் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட எம்.ஐ ரக ஹெலிகாப்டர்கள் உள்பட பல சேதமடைந்தன. இந்தியா அளித்திருந்த இரு பரிமாண ராடார்கள் எல்டிடியியின் விமானம் வந்த்தைக் கண்டறிய முடியவில்லை. எனவே சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடார் பெறமுடிவு செய்யப்பட்ட்தாகவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். விமான பாதுகாப்பை பலப்படுத்தவும் அமெரிக்க உதவியைக் கோத்தபயா அப்போது கோரினார் என ஒரு கேபிள் கூறுகிறது.

மே 2009ல் எண்ணெய் மற்றும் எரிவாயுக்கிடங்கின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்திய பின் ராடார் குறித்த அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் கடல்பரப்பை கண்காணிக்க அமெரிக்கா அளித்த ராடார்களை வடபகுதியில் நிறுவாமல் அவற்றை தெற்குப் பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என இந்தியா வற்புறுத்தியதாகவும் ஆனால் அதற்கு இலங்கை மசியவில்லை என்றும் இறுதியில் இந்தியா தனது ஆட்சேபணைகளைத் திரும்பப்பெற்றதாகவும் இன்னொரு தந்தி கூறுகிறது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

1 comments:

"குறட்டை " புலி said...

இறுதி பட்டியலாக இருந்தால் பரவாயில்லை.அதிமுக வில் ஏபரல் 12 தேதிவரை எதுவும் நடக்கலாம்.