தனிநபர் வருவாயில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகள் , மற்றும் இந்தியாவில் உள்ள மாநிலங்கள்

தனிநபர் வருவாயில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் தனிநபர் ஆண்டு வருவாய் 2009-10 கணக்கீட்டின்படி ரூ 46492 ஆக உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் இன்று தெரிவிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் தனிநபர் ரூ 25 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வரும் 2050ம் ஆண்டு இந்திய தனி நபர் வருமானம் ரூ 18 லட்சத்துக்கும் அதிகமாக உயரும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. ஆனால் அப்போதும் கூட முதல் 10 இடங்களுக்குள் இந்தியா வர வாய்ப்பில்லையாம்.

தனி நபர் வருவாயில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

அவற்றின் விவரம் (மதிப்பு டாலர்களில்):

1. சிங்கப்பூர் - $56,532
2.நார்வே -$51,226
3. அமெரிக்கா - $45,511
4. ஹாங்காங் - $45,301.
5. ஸ்விட்சர்லாந்து-$42,470
6. நெதர்லாந்து - $40,736
7. ஆஸ்திரேலியா - $40,525
8. ஆஸ்திரியா - $39,073
9.கனடா - $38,640
10. ஸ்வீடன் -$36,438




தனிநபர் வருமானத்தில் கோவா முதலிடம்:

தனிநபர் ஆண்டு வருமானத்தில் கோவா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார், லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில், கடந்த 2009-10ம் நிதியாண்டில், தனிநபர் ஆண்டு வருமானத்தில் கோவா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. அம்மாநில ஆண்டு தனிநபர் வருமானம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ரூபாய். இந்த பட்டியலில் சண்டிகார் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. சண்டிகாரின் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 912 ரூபாய். மூன்றாம் இடத்தில் உள்ள டில்லியின் ஆண்டு தனிநபர் வருமானம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 886 ரூபாய். இப்பட்டியலில் பீகார் மாநிலம் கடைசி இடம் பெற்றுள்ளது. இம்மாநிலத்தின் ஆண்டு தனிநபர் வருமானம் 16 ஆயிரத்து 119 ரூபாய். தமிழகத்தில் தனிநபர் ஆண்டு வருமானம் 62 ஆயிரத்து 499 ரூபாய்.

Post a Comment

3 Comments

ADMIN said…
பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்..