உலகபுகழ்பெற்ற தேடுதல் வலைதலமான கூகுள் இந்தாண்டு புதிதாக 6 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தாண்டு கூகுளுக்கு அதிகமான வேலைப்பளு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சமாளிக்க உலகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பினை உருவாக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து கூகுள் வலைதலத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிப்பிரிவின் துணைத்தலைவர் ஆலன் ஈஸ்டாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூகுள் இணையதளத்திற்கு கடந்த 2010-ம் ஆண்டு முதற்கட்டமாக பொறியியல், விற்பனை பிரிவுக்கு 4,500 பேரை நியமித்தோம். இந்தாண்டு பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் அதிக வேலைப்பளு இருப்பதால் , நன்கு திறமையான தகவல் தொழில்நுட்பத்திறன் கொண்டவர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி 6000 பேரை புதிதாக நியமி்க்கவுள்ளோம். பேஸ்புக், யுடியூப் போன்ற சமூக வலைதலங்களுக்கு போட்டியாக நிறுவனத்தினை மேம்படுத்த வேண்டியுள்ளது. தற்போது கூகுள் குரோம் என புதிய சாப்ட்வேரை 120 மில்லியன் மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். இம்மாதிரி ஏதேனும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டியிருக்கிறது. பேஸ்புக் வலைதலம் இந்தாண்டு 2,000 பேருக்கு பணியிடங்கள் வழங்கும் அளவு வேலைப்பளு உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல் கூகுள் வலைதலமும் 6 ஆயிரம் பேருக்கு பணி வழங்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
1 Comments
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html
vote me..