கடுவெளி சித்தர்


"பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றைன மறையும் மறைந்தன் தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்"

மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நூறாண்டுகள் முழுமையாக வாழலாம் என்கிறார்கள் சித்தர்கள். மனதிற் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளி சித்தர். அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்தால் முழு ஆயுளோடு வாழ வழி சொல்கிறார் கடுவெளியார்.

“யாரிடமும் எதையும் யாசித்துப் பெறாதீர்கள், மனதில் எந்த இச்சைகளுக்கும் அடிமையாகாதீர்கள், பெண்களின் மீது ஆசை வைத்து மோகத்தை வளர்க்காதீர்கள், உயிரினங்களுக்கு துன்பம் செய்யாதீர்கள், உங்களுக்கு கெடுதல் செய்பவர்களையும் நீங்கள் பாவச் சொல்லில் திட்டாதீர்கள், எந்த கஷ்டம் வந்தாலும் பொய் பேசாதீர்கள், மனைவியை பழிக்காதீரகள், மமதையுடன் தான் என்கிற அகம்பாவத்துடன் நடக்காதீர்கள், அடுத்தவரை கெடுக்க நினைக்காதீர்கல், நூறு பேரின் நடுவே தன்னை போற்ற வேண்டும் என புகழ் விரும்பி அலையாதீர்கள். இந்த செயல்களை தவிர்த்தாலே மனிதன் சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வாழலாம் என்கிறார்.
மதுரை அடுத்துள்ள கல்லுப்பட்டிக்கு அருகிலுள்ள ரெங்கபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும் அற்புதங்களும் நிகழ்த்தியவர் முனியாண்டி. சாதாரண, மனிதரைப்

போன்றே இயல்பான, அமைதியான முகத்துடன் சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளிக்கும் இவர் உடலில் காவி உடையை சுற்றியிருப்பார். அவருக்கு எதிரே என்ன பிரச்சனைகளோடு யார் சென்று நின்றாலும் அவர்களின் ஆன்மாவிடம் பேசி, அந்த அன்பர்களுக்கு தெரியாமலே அவர்களின் பிரச்சனைகலிருந்து அவர்களுக்கு விடுதலை வழங்கி விடுவார். அரிஜன வகுப்பைச் சார்ந்த தாய் தந்தையருக்கு பிறந்தவர் கடுவெளி சித்தர். தனது இளம் வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் மாடுகளை மேய விட்டுவிட்டு அரச மரத்து பிள்ளையார் குளக்கரையில் தூங்க ஆரம்பித்தார். அப்போது மனதை மயக்கும் இரம்மியமான மணமும், மெல்லிய மணியோசையும் கேட்க, மெல்ல கண் திறந்தவர், சட்டென எழுந்து உட்கார்ந்தார். காரணம் அவருக்கு எதிரே தீட்சணய பார்வையுடன் வாட்டசாட்டமான ஒரு உருவம் நிர்வாண நிலையில் நின்றிருந்தது. அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்ட சித்தர், பயத்தில் ஓடிச் சென்று தனக்கு அருகே இருந்த அரசமரப் பிள்ளையாரை தழுவிக்கொண்டார். அடுத்த நொடி அவருக்குள் மின்சாரம் பாய்ந்த போல் உணர்வால் உடல் முழுவதும் சிலிர்ந்தது. சில நொடிகள் தன்னை மறந்த நிலையில் இருந்த சித்தர் கண் விழித்தபோது எதிரே இருந்த உருவம் மெல்ல சித்தரை நெருங்கி வந்தது. சித்தரின் தலை உச்சியில் தன் கரம் பதித்து ஆசீர்வதித்து விட்டு சொன்னது "இப்போது நீங்கள் தழுவியிருக்கிறீர்களே இந்த ஆனைமுகன், இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதீட்சை செய்தது தாத்தா சித்தர் என்கிற மகான். அவர் வழியில் வந்தவன் நான். நீங்கள் எமது கையால் தீட்சைப் பெற்று சித்தராக வேண்டும் என்பது இறைகட்டளை. இனி நீங்கள் தவிர்த்தாலும் உங்களை தொடர்ந்து வருவேன். உங்களுக்கு உபதேசம் தருவேன்" என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்துவிட்டது. சிறுவனான முனியாண்டி இந்த நிகழச்சியை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அதை யாரும் நம்பவில்லை. ஆனால் தாத்தா சித்தர் தினமும் சிறுவன் முன்பு தோன்றி மறைந்துவிடுவார். மெல்ல மெல்ல முனியாண்டி எனும் சிறுவன் சித்தர் பகவானுக்குரிய எல்லா யோகங்களும் தவங்களும் செய்து முடித்து சித்தரானார்.

இந்த சிறுவயதிலேயே அவர் பல அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார். சாதாரண மனிதராகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சித்தர் வயல் வேலை செய்வாராம். அங்கே தன்னோடு பணிபுரிகிற நண்பர்களுக்கு மதிய வேளையில் தனது அதிசய சக்தியால் உணவு வரவழைத்து நண்பர்கள் பசியை போக்குவார். அதே போல் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று மேலே கிளம்பி பறவையைப் போல் பறப்பாராம். இதை நேரில் கண்ட பாலசுப்ரமணியம் என்பவர் பிரமிப்பாக சொல்கிறார். இந்த சிறு வயதில் சித்தருக்கு பல தேவதைகள் தரிசனம் தருவார்களாம். சில சமயம் அவர் தவத்தில் உட்கார்ந்து இருக்கும்போது சில தேவதைகள் தடுக்க முயலுமாம். ஆனால் எந்த தடை தடங்களுக்கும் செவி சாய்க்காமல் சித்தர் முனியாண்டி தவத்தை மேற்கொள்வாராம். அதேபோல் சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தியிருந்ததால் வடநாட்டிலுள்ள மதுரா, பிருந்தாவனம் முதலிய இடங்களுக்கும் ஸ்ரீலங்காவிலுள்ள கதிர்காமம் கோவிலுக்கும் அடிக்கடி பறந்து சென்று முருகனை தரிசித்துவிட்டு திரும்புவாராம். சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தி இருப்பது போல காற்றாய் மறையும் சக்தியும் இருந்தது. ஒருமுறை சித்தர் முனியாண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று மீனாட்சி அம்மனை தொழுதுகொண்டிருந்தபோது, ஒரு பித்தனை போன்ற நிலையிலிருந்த சித்தரை பார்த்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய, அவர் திமிறினாராம். உடனே அவர் கையில் விலங்கிட்டார்கள். சித்தர் முனியாண்டி அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே “இந்த உலகத்தில் எனக்கு பூட்டா? முடியாது? என சொல்லிக்கொண்டே சட்டென மறைந்து போனார். அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய அவர் முன் கைவிலங்கு வந்து விழுந்ததாம்.

அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பாக சித்தர் முனியாண்டி நிற்க, உள்ளிருந்த சிப்பந்திகள் "அந்த பரதேசியை கடைக்குள் விடாதீர்கள், அப்படியே விரட்டுவிடுங்கள்"

என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினர். ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் சித்தர் முனியாண்டியை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என் மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் தோன்றி மறைந்தது. அடுத்த நொடி அவர்கள் கண் திறந்தபோது எதிரே பரதேசி கோலத்திலிருந்த சித்தர் முனியாண்டி இப்போது பெரிய செல்வந்தர் போன்று கோட், சூட் சகிதமாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும் சுற்றி இருந்தவர்களும் சித்தர் முனியாண்டி ஆச்சரியமாக பார்க்க அவர் "என்ன பண்றது, பரதேசி கோலத்திலிருந்ததால் கடைக்குள்ளே விடாம துரத்தப்பார்த்தார்கள், அதான் இப்படி மாறிவிட்டேன். இனிமேல் உடையை மட்டும் பார்க்காதீர்கள், மனிதனை பாருங்க, மனசைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு ஓட்டலுக்கு செல்லாமலே நகர்ந்துவிட்டார்.

நன்றி .அதிகாலை

3 comments:

sakthistudycentre-கருன் said...

ஒரு நாளைக்கு 1 அ 2 பதிவு போதும்.அப்போதுதான் அது பலரையும் சென்றடையும்...

sakthistudycentre-கருன் said...

vote pottutten,
namma pakkam vaanga...
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

vote podunga...

karurkirukkan said...

உங்கள் அன்புக்கு ஆயிரம் நன்றிகள்