108 வயதில் விடுதலை‌யாகும் சிறைக்கைதி

உத்தரபிரதேசத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 108 வயது முதியவர் உலகின் வயதான சிறைக்கைதி என்ற பெருமையினை பெற்றார். இவர் வரும் 26-ம் தேதி நன்னடத்ததை கீழ் விடுதலையாக உள்ளார். உத்தரபிரதேச மாநிலம்‌ கோரக்பூர் நகரிலிருந்து 275 கி‌.மீ தொலைவில் உள்ள பாராஹரா மன்காட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரைஜ் பிகாரி (108). இவர் கடந்த 1987-ம் ஆண்டு பரியாபூர் ஷகாய் மாவட்டத்தில் முன்விரோத தகராறில் 4 பேரை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவருடன் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு லக்னோ கோர்ட் இவர்களுக்கு 24ஆண்டுகள் ஆயுள் தண்‌டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்ப‌ோது பிரைஜ்பிகாரிக்கு வயது 84. இந்த வ‌யதில் இவரால் எப்படி கொலை செய்ய முடியும் என சிறை அதிகாரிக‌‌ளே சந்தேகமடைந்தனர். வயதானாலும் பிரைஜ்பிகாரி சிறைதண்டனையையும் இவர் முழுமையாக அனுபவித்தார். சிறை சட்டப்படி ஒரு கைதி 60 வயது பூர்த்தியடைந்தும், 12 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்திருந்தால் நன்னடத்தையின் படி விடுதலை செய்யலாம். இந்நிலையில் உ.பி. முதல்வர் மாயாவதியின் 55-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை‌யொட்டி நன்னடத்தையின் கீழ்‌ சில கைதிகளை விடுவிக்க உ.பி. அரசு உத்தரவிட்டிருந்தது. அதில் பிகாரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதன்படி வரும் 26-ம் தேதியன்று குடியரசு தினம் என்பதால். இவர் விடுதலை செய்யப்படவுள்ளார். இதற்கிடையே 108 வயதானலும் சிறையில் உள்ள பிகாரி இன்னும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவரது உடல் மற்றும் மன நிலை ‌நன்றாக இருப்பதாகவும் சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். வரும் 26-ம் தேதியன்று சிறை வாழ்வை முடித்து வெளியே வரவுள்ளார். 108 வயதில் சிறை சென்று வந்த பிரைஜ்பிகாரி உலகின் மிகவும் வயதான சிறை கைதி என்ற பெருமையினை பெறுகிறார். இவருடன் கைதான 18 பேரில் 3 பேர் சிறையில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டனர்.

2 comments:

sakthistudycentre-கருன் said...

காசு இருக்கனும் இல்ல அரசியல்வாதியா இருந்திருந்தா எப்பவோ வெளிய வந்திருக்களாம். என்ன செய்ய நாடு இப்படி இருக்கு..

karurkirukkan said...

கொஞ்சம் தப்பு போன்றவன்தான் இப்படி கஷ்டபடனும் , நிறைய தப்பு பண்றவன் வெளிய வந்து விடுவான்