இன்டெர்நெட் உபயோகம்: இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

உலகம் முழுவதும் இன்டெர்நெட்டை உபயோகப்படுத்துபவர்களில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என கூகுள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைமை பொறுப்பாளர் வினய் கோயல் தெரிவித்துள்ளார். சீனாவில் 300மில்லியன் மக்கள் இன்டெர் நெட்டை உபயோகிப்பதால் முதலிடத்தையும், அமெரிக்காவில் 207 மில்லியன் மக்கள் இன்டெர்நெட்டை உபயோகிப்பதால் இரண்டாம் இடத்தையும், 100 மில்லியன் அளவை கொண்டு இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது என அவர் தெரிவித்தார்.மேலும் நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் 40 மில்லியன் மக்கள் மொபைல் போன் மூலம் இன்டெர்நெட்டை உபயோகிப்பதாகவும், வரும் 2012-ம் ஆண்டிற்குள் மொபைல் இன்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களை லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பார்க்கவைக்க முயற்சி செய்து வருவதாகவும், கடந்த 2007-ல் 2 மில்லியன் மக்கள் இன்டெர்நெட்டை பார்த்துவந்தனர். இது தற்போது 20 மடங்காக அதிகரித்துள்ளது.

No comments: