உலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியின் எந்திரன்

உலகின் மிகப் புகழ்பெற்ற திரைப்பட இணையதளமான ஐஎம்டிபியின் சிறந்த 205 பட பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் – தி ரோபோ இடம்பெற்றுள்ளது. அதுவும் முதல் 50 இடங்களுக்குள் எந்திரன் வந்துள்ளது. 10-க்கு 7.4 புள்ளிகளுடன் 39-வது இடத்தில் உள்ளது எந்திரன்.இது தமிழில் வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெருமையாகும்.
ஐஎம்டிபி என்பது ஹாலிவுட்டின் பைபிள் என்று போற்றப்படும் அளவுக்கு நம்பகத் தன்மை மிக்கது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியான படங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகிறது இந்தத் தளம். பார்வையாளர்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஐஎம்டிபியின் முதல் 50 பட வரிசையில் இந்தியாவிலிருந்து 7 படங்கள் இந்தப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. அவற்றில் எந்திரனும் ஒன்று.தமிழில் எந்திரன்என்ற தலைப்பில் நேரடிப் படமாகவும், தெலுங்கு இந்தியில் ரோபோ என மொழிமாற்றுப் படமாகவும் உலகம் முழுவதும் வெளியான எந்திரன் வசூலில் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 75 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்தப்படம்தான் இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமாகும். வெளிநாடுகளில் அதிக வசூல் செய்ய இந்தியப் படமும் எந்திரன் ரோபோவே. இதுவரை ரூ 380 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது வெளியான மூன்று மொழிகளிலும்.படத்தின் உருவாக்கம், தரம் மற்றும் ரஜினியின் மிகச் சிறந்த நடிப்பை சர்வதேச திரைக்கலைஞர்கள் பாராட்டினர். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், எந்திரன் ஒரு புதுமையான படம் என்றும்,தான் மிகவும் ரசித்துப் பார்த்த படம் இது என்றும் பாராட்டினார்.இத்தனை சிறப்புகளுக்கும் சிகரம் வைப்பது போல் இப்போது ஐஎம்டிபியின் உலகப்பட பட்டியலிலும் எந்திரன் இடம் பிடித்துள்ளது.
இந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதுகிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன்.10-க்கு 9 புள்ளிகள் அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன.
இனி தான் செய்யும் எந்த விஷயமும் தமிழருக்கு பெருமை சேர்ப்பதாகவே அமையும் என்று ரஜினி தொடர்ந்து கூறிவருவது நினைவிருக்கலாம். திரைப்படைத் துறையைப் பொறுத்தவரை, எந்திரன் ஏற்கெனவே உலக சினிமாவின் முக்கிய வரிசையில் இடம்பெற்று, ரஜினியை உலக சூப்பர் ஸ்டாராக்கியது. தற்போது ஐஎம்டிபியின் அங்கீகாரம் ரஜினியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாய் ஜொலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: http://www.imdb.com/search/title?year=2010,2010&title_type=feature&num_votes=1000,&sort=user_rating,desc


couretsy.envazhi

No comments: