ஹன்ஸிகாவுடன் பிரபுதேவா புதுக் காதல்-பிரபு தேவாவை என்ன செய்வது ?


ஏற்கெனவே ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிரபு தேவா, நயன்தாராவுடன் கள்ளக் காதல், திருமணத்துக்கு முயற்சி என வேறு ரூட்டில் பயணித்து வருகிறார்.

இதனை எதிர்த்து பிரபருதேவா மனைவி ரம்லத் நீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்காக தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகளில் பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் அனுப்பப்பட்ட சம்மனுக்கே இன்னும் பதில் தராமல் டிமிக்கி கொடுத்து வருகிறார் பிரபுதேவா. நயன்தாரா தனது சென்னை இருப்பிடத்தை ரகசியமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், நயன்தாராவுடனான காதலும் பிரபுதேவாவுக்கு சலித்துவிட்டது போலிருக்கிறது.

இப்போது தனது எங்கேயும் காதல் படத்தில் நாயகியாக நடிக்கும் ஹன்ஸிகா மோத்வானி மீது அவருக்கு புதிய காதல் பிறந்துள்ளதாம். இருவரும் இப்போது ஒன்றாகச் சுற்றத் தொடங்கியுள்ளார்களாம். ஹன்ஸிகாவை ஷாப்பிங் அழைத்துப்போனாராம் பிரபுதேவா. வெளியிடங்களில் இருவரும் தங்கும் அளவு முன்னேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரபு தேவாவிடம் கடுமையாக சண்டை போட்டாராம் நயன்தாரா.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால், பக்கத்திலிருந்தவர்கள் என்னவோ ஏதோவென்று வந்து விசாரிக்கும் அளவுக்கு விபரீதமாகப் போய்விட்டதாம் நிலைமை.

பிரபு தேவாவை என்ன செய்வது ?


courtesy.thatstamil

No comments: