வரமா? சாபமா?

karurkirukkan.blogspot.com

வரமா; சாபமா?
இந்த ஆறாம் அறிவு,
மனிதனுக்கு?..

படித்தோம், பகுத்தறிந்தோம்,
பண்பட்டோம்.
“அறிவு” வரம்தானே?

சாதிபிரித்தோம், சண்டையிட்டோம்
செத்தொலிந்தோம்.
“சாவு” சாபம்தானே?

காதல்கொண்டோம்,கற்புகண்டோம்
கல்யாணம் செய்தோம்.
“காதல்” வரம்தானே?

பகைவளர்த்தோம், கருணைமறந்தோம்,
கொலையும் செய்தோம்.
“கொலை” சாபம்தானே?

அறிவியல் வளர்த்தோம்,கருவிகள் செய்தோம்,
விண்வெளி சென்றோம்.
“சாதனை” வரம்தானே?

அறிவு வளர்த்தோம், துப்பாக்கி செய்தோம்,
அணுகுண்டும் செய்தோம்.
“சண்டை”சாபம்தானே?

சொல்லுங்கள் இப்போது
வரமா சாபமா?
இந்த ஆறாம் அறிவு.


எழுத்து : சக்தி குமார் . கோவை

No comments: