பெண்ணின் உடலில் இருந்து '13 ஆணிகளும் 5 ஊசிகளும் அகற்றப்பட்டன'


சவுதி அரேபியாவில் கொடுமைகளுக்கு உள்ளாகி இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண்ணி்ன் உடலில் இருந்து 18 ஆணிகளையும் ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.தனது வீட்டு எஜமானி, தனக்கு தண்டனையளிப்பதாகக் கூறி ஆணிகளை சூடேற்றிக்கொடுக்க, எஜமான் அவற்றை உடலில் ஏற்றியதாக எல்.ஜீ.ஆரியவதி என்ற இந்த வீட்டுப் பணிப்பெண் கூறுகின்றார்.இன்னும் ஆறு ஆணிகள் இந்தப் பெண்ணின் கைகளிலிருந்து அகற்றப்படாதிருப்பதாக கூறும் மருத்துவர்கள், அவற்றை அகற்றுவதால் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஆணிகள் 2 அங்குலம் வரை நீளமானவை.இந்த துன்புறுத்தல் சம்பவம் குறித்து ரியாத்தில் உள்ள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.சுமார் 1.8 மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் 70 வீதமானவர்கள் பெண்களாவர்.வீட்டுவேலையாட்களாக பணிபுரியும் இலங்கையர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் சிறு தொகையினர் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளிலும் தொழில் புரிகின்றனர்.

உலகில் இனி மனிதத்தை தேடித்தான் பிடிக்க வேண்டும்
courtesy.bbc
karurkirukkan.blogspot.com

1 comment:

tamildigitalcinema said...
This comment has been removed by a blog administrator.