உலக சினிமாவை காண்கின்ற தமிழர்களுக்கு மனதில் ஒரு நெருடல் உண்டாகும் ,தமிழில் உலக சினிமா தரத்திற்கான திரைப்படங்களை எப்போது பார்ப்பது என்று ? மணிரத்னத்தின் சில படங்கள் அவ்வப்போது அந்த தரத்திற்கு வந்துள்ளது , இருந்த போதும் அதற்கு பின்பு அடுத்த தலைமுறை இயக்குனர்களை தேட வேண்டியுள்ளது ,
பாலா, அமீர் , சேரன் ,பாலாஜி சக்திவேல் ,வசந்த பலன் , ஜனநாதன் போன்றவர்கள் நம்பிக்கை தரக்கூடிய இயக்குனர்கள் , இதற்கான முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டுள்ளனர் , இந்த வரிசையில் மதராசபட்டினம் இயக்குனர் திரு.விஜய் அவர்கள் சத்தமில்லாமல் வந்து முதல் வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
அவர் மேலும் இது போன்று நல்ல படைப்புகள் படைக்கவும்,இந்த சிறந்த படைப்பை உருவாக்கியதற்கும் அவருக்கு எனது பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும்.
நன்றி
6 Comments
அப்படத்தில் பணியாற்றியவர்கள் சிறந்த படைப்பளிகள்...நிச்சயம் அவர்கள் கௌருவிக்கபடவேண்டும்.
புதுமை சென்னை, என்ன பழமையாய் மிளிர்கிறது. கூவம், கங்கையாய் தெருகிறது.....இந்த படம் நிச்சயம் பல விருதுகளை குவிக்கும்...ஆஸ்காருக்கே பரிந்துரைக்கலாம்...ஆனால் விருது வெல்லுமா எனபது சந்தேகமே ஏனென்றால் இதில் வெள்ளக்காரன் நம்மிடம் அடிவாங்குகிறான். அவன் அடி கொடுத்து நாம வாங்கினா விரு...து கிடைக்க வாய்ப்யிருக்கு இந்நாட்டின் சுதந்திரமும் அடி வாங்கிதானே கிடைத்தது. இன்னும் அவன் நினைப்பில் அடிமைகலாகத்தானே நாம் உள்ளோம்..
இத்திரைபடத்தில் பணியாற்றிய பணியாளர்கள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்கள் , இந்த படம் கண்டிப்பாக பல விருதுகள் வாங்கி குவிக்கும் , இது போன்ற படைப்புகள் இனி எப்பொழுதும் வந்து கொண்டேயிருந்தால் நம்மை உலக சினிமா அரங்கிலிருந்து ஒரு பயலும் அசைக்க முடியாது !
'அமைதி விரும்பி' பார்த்துவிட்டு மிகச் சிறப்பாக, படம் இருப்பதாகச் சொன்னான். எனது மகனை திருப்பதிப் படுத்துவது,அவ்வளவு எளிதான செயல் அல்ல. நல்ல படம் என்பதற்கு இதுவே சான்று.