இந்தியா சிறந்த அவுட்சோர்சிங் சந்தை



அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மேனேஜ்மெண்ட் கன்சல்டிங், டெக்னாலஜி சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் துறையில் முடிசூடா மன்னனாக விளங்கும் அசென்சர் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 50 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு செயல்படும் முன்னணி அவுட்சோர்சிங் நிறுவனமாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அசென்சர் நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வில்லியம். டி. கிரீன் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : சர்வதேச அளவில், தங்கள் நிறுவனம் 50 நெட்வொர்க்களை கொண்டுள்ளதாகவும், 1 லட்சம் பணியாளர்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றிவருவதாகவும், இந்தியாவில் மட்டும் 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், இதன்மூலம், இந்தியா சிறந்த அவுட்சோர்சிங் சந்தையாக விளங்குவதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம், மற்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் காக்னிஜன்ட் டெக்னாலஜி நிறுவனங்களோடு இணைப்பு மேற்கொண்டுள்ளதாகவும், 2009ம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் கூறியதாக கிரீன் அதில் தெரிவித்துள்ளதாவது, தற்போது இந்தியாவில் தங்கள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 42 ஆயிரமாக உள்ளதாகவும், 2010ம் ஆண்டின் இறுதியில் 50 ஆயிரத்தை தொடும் என்று கூறியிருந்ததாகவும், ஆனால், அந்த நிகழ்வு 2010ம் ஆண்டின் மே மாத இறுதியிலேயே நிகழ்ந்துள்ளது, இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் அபார வளர்ச்சியையே காட்டுவதாக அதில்
அவர் தெரிவி்த்துள்ளார்.

thanks.dinamalar

Post a Comment

0 Comments