தினமணிக்கு நன்றிஇந்த வலைப்பூ ஆரம்பிக்கும்பொழுது ஒரே ஒரு என்னத்தை மட்டும் மிக ஆழமாக பிடித்து கொண்டு ஆரம்பித்தேன் , அது என்னவென்றால் இதில் வரும் படைப்புகள் எல்லாமே என்னுடைய சொந்த படைப்பாக இருக்க வேண்டும் என்பது , ஆனால் காலம் செல்ல செல்ல , நேரம் இல்லாமை ,மற்றும் சரியான அங்கீகாரம் (நாம எழுதி யாரு சார் படிககபோறா ? என்ற எண்ணம் ) இல்லாமை போன்ற வற்றால் படங்கள் ,காணொளிகள் ஆகியவை எனது இடுகையாக வர ஆரம்பித்தது , பிறகு ஒரு சமயத்தில் அதுவும் சலிக்க ஆரம்பித்து விட்டது ,பிறகு எழுதலாம் என்ற முடிவு எடுத்து எழுத கொண்டிருக்கும்போது ஒரு சில பாராட்டுகள் , வர ஆரம்பித்தன ,


ஒரு நாள் நானும் என் நண்பர் திரு.ரஞ்சித் அவர்கள் தான் ,இருவரும் மதராசப்பட்டினம் படம் பார்த்து விட்டு பேசிக்கொண்டு வருகையில் ,இது போன்ற படைப்புகள் உருவாவதற்கு காரணம் ஆக இருந்தவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும் , அதற்கு நாம்மால் முடிந்தவற்றை செய்யலாம் என்று யோசித்தபோது , சரி நம்மிடம் தான் வலைபூ இருக்கிறதே அதில் நாம் இந்த படத்தை பற்றி இடுகையாக எழுதினால் அந்த இடுகை 97(email readers) பேரிடம் மின்னஞ்சல் மூலமாக போய் சேரும் , அதன் மூலம் அவர்கள் படத்தை பார்ப்பார்கள் , என்ற எண்ணத்தின் மூலம் இந்த விமர்சனம் எழுதப்பட்டது .மதராசப்பட்டினம் படம் இயக்குனர் விஜய்க்கு மட்டும் அல்ல எனக்கும் அங்கீகாரம் கொடுத்து விட்டது .
(என்னை மதராசப்பட்டினம் விமர்சனம் எழுத தூண்டிய திரு.ரஞ்சித் அவர்களுக்கு மிக்க நன்றி)


மதராசப்பட்டினம் படத்தை பற்றி நான் எழுதிய விமர்சனம் தினமணி இணையதளத்தில் (22.07.2010) முதல் பக்கத்தில் பிரசுரித்து என்னை மீண்டும் எழுத தூண்டிய தினமணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

நன்றி

(இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல , என்னோமோ ஆஸ்கார் அவார்டு கொடுத்த மாதிரி சீன் போடுற? , என்னங்க பண்றது மனிதன் எதிர்பார்ப்பது என்றுமே செய்யும் வேலையில் நல்ல பண்றதா தம்பி வெரி குட் என்று தட்டி கொடுக்கும் கைகளைதானே ?

மதராசப்பட்டினம் விமர்சனம்
http://karurkirukkan.blogspot.com/2010/07/blog-post_19.html


மதராசபட்டினம் இயக்குனர் திரு.விஜய் அவர்களுக்கு பாராட்டு
http://karurkirukkan.blogspot.com/2010/07/blog-post_4531.html

2 comments:

ராசராசசோழன் said...

நண்பரே....நடத்துங்கள் உங்கள் ஆட்டத்தை...லிங்கா(Link) கொடுங்க அப்பத்தான் வாசகர்களுக்கு எளித இருக்கும்

BOSS said...

வாங்க சோழன் அவர்களே
இனி எல்லாவற்றையும் லிங்க் கொடுத்துவிடலாம்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி