ஊடலில் தெளிந்தேன்.

நமக்குள் காதலான நாட்களில் - நான்
காதலை ரசித்ததில்லை
காதலியை ரசித்தேன் - உன்
அருகாமையை புசித்தேன்.

கவிதைகளும் எழுதியதில்லை - ஏனோ
கற்பனையும் பிறந்ததில்லை

அன்று நான் நிஜம் தவிர்த்து
நிழல் ரசித்த, “அரைக்காதலன்”

ஆனால்…

நமக்குள் மோதலான நாட்களில் - நான்
காதலை ரசிக்கிறேன்,
கவிதைகள் வரைகிறேன் - உன்னுடன்
கற்பனையில் வாழ்கிறேன்.

கைபேசி, கைக்குட்டை, காபி ஷாப்,
கடற்கரைச்சாலை, காளிகாம்பாள் கோவில் என-
உலகத்தின் ஒவ்வொரு நிகழ்வும்
எனக்குள் உன்னையே விதைக்கிறது
விதைத்து நித்தமும் வதைக்கிறது.

இன்று நான் நிழல் தவிர்த்து
நிஜம் ரசிக்கும் “முழுக்காதலன்”.

அன்று நான் காதல் கண்டவன் - ஆனால்
இன்றோ காதல் கொண்டவன்.

எனவே..

உன் மௌனம் கலைத்துவிடு - மீண்டும்
காதல் கொடுத்துவிடு - என்
சாதல் தடுத்துவிடு…

எழுதியவர் : சக்தி குமார்-கோவை

Post a Comment

0 Comments