இதுதான் இந்தியா

by 12:13 PM 2 comments
விளம்பரம் -சச்சினை முந்தினார் தோனி


இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம் எஸ் தோனி விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக 200 கோடி ரூபாய் வருமானம் தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
எந்த கிரிக்கெட் வீரருக்கும் இதுவரை கிடைக்காத அளவுக்கு பெரிய வருமானம் இது.

சச்சின் டெண்டூல்கர் உள்ளிட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் யாருக்கும் இந்த அளவுக்கு பெருந்தொகையான பணம் கிடைத்ததில்லை என்று கூறப்படுகிறது.தோனி, ரோகிதி ஸ்போர்ட்ஸ் என்ற விளையாட்டு மேலாண்மை நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ள இரண்டு ஆண்டுகால ஒப்பந்தத்தின் படி அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானதாக ரோஹித் நிறுவனத்தின் பொது மேலாளர் சஞ்ஜை பாண்டே தெரிவித்துள்ளார். விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக 2006 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டூல்கர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் அவருக்கு 40 மில்லியன் டாலர்கள் கிடைத்தது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐசிசியின் முதலாவது 20 இருபது போட்டிகளில் தோனி தலைமையிலான அணி வெற்றி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.தற்போதைய நிலையில் 22 முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் தோனி நடிக்கிறார்.

போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் தோனிதான் உலகிலேயே அதிக அளவு சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்று கூறப்பட்டிருந்தது. தோனியின் ஆண்டு வருமானம் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், தெண்டூல்கரின் ஆண்டு வருமானம் 8 மில்லியன் டாலர்களாகவும் இருப்பதாக அது கூறியுள்ளது.வறுமை -இந்தியா முதலிடம்


ஆப்பிரிக்காவில் உள்ள 26 மிக வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது.பிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு வறியவர்களின் நிலையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளதாக இந்த ஆய்வின் இயக்குனர் டாக்டர் சபினா அல்கிரி கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும் நாட்டில் வறுமை பெருமளவில் இருக்கிறது என்று பலரும் கருதிவந்ததை இந்த ஆய்வு உறுதிசெய்துள்ளது.இவர்களின் புதிய அட்டவணையின் படி உலகில் மொத்தம் 170 கோடி பேர் வறியவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் தெற்காசியாவில்தான் வாழ்கின்றனர். ஆப்ரிக்காவில்
கால்வாசிபேர் வாழ்கின்றனர்

thanks.BBC

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

2 comments:

rasarasachozhan said...

சொல்ல வந்த விசயத்த தெளிவா சொல்லிடீங்க

BOSS said...

thank you