வேலைவாய்ப்பு புதுப்பிக்க சலுகை

வேலைவாய்ப்பு பதிவை 2006ம் ஆண்டு முதல் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, ஒரு முறை புதுப்பித்தல் சலுகை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2006, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு முறை சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2009ம் ஆண்டு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒட்டுமொத்த புதுப்பித்தல் சலுகையும் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சலுகையை பெற விரும்புவோர், அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு உரிய ஆவணங்களுடன் மனு செய்ய வேண்டும். இச்சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும். மூன்று மாதங்களுக்கு பின் பெறப்படும் மனுக்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

No comments: