பேருந்தில் நீங்க பத்திரமா இருக்க - எனக்கு ஏற்பட்ட அனுபவம்


ஒரு நாள் நான் பேருந்தில் ஏறினேன் , அப்போது நடத்துனர் என்னிடம் வந்து டிக்கெட் கேட்டார் , நான் என் கையில் வைத்து இருந்த CD யை இருக்கையில் வைத்து விட்டு என்னுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து நடத்துனரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு என் இருக்கையில் பார்த்தால் நான் வைத்த CD யை காணவில்லை , நான் நல்ல எல்லா பக்கமும் தேடினேன் , பிறகு நான் அருகில் இருந்த இருக்கையில் இருந்த ஒருவரிடம் கேட்டேன் , என்னோட CD இங்கே இருந்துச்சு பாத்திங்களா அப்டீன்னு கேட்டேன் , அதுக்கு அவர் சொல்றார் சினிமா CD யானு கேட்டார் , இல்லங்க அது சாப்ட்வேர் அப்டீன்னு சொன்னேன் , உடனே அவருடைய சட்டைக்கு உள்ள இருந்து என்னோட CD யை எடுத்து கொடுத்தார் , எனக்கு ஒரே அதிர்ச்சி , பாக்க எவ்வளவு நாகரீகமா இருக்கார் , நான் அவரை ஒன்றும் சொல்ல வில்லை (இன்னும் சரியாய் சொல்லனும்ன நான் யோசிக்க ஆரம்பிச்சு விட்டேன் ,ஏன் எடுத்தான் ஏன் கொடுத்தான் )அதுல இருந்து பேருந்தில் இன்னும் விழிப்பாக இருக்க முடிவெடுத்து விட்டேன் .

இந்த சம்பவத்தை நான் ஏன் உங்களுக்கு சொல்றேனா ?
பேருந்தில் நீங்க பத்திரமா இருக்கணும்
நீங்க இந்த சூழலில் இருந்தால் என்ன செய்வீங்க ???
கமெண்ட்ஸ் போடுங்க

6 comments:

குழலி / Kuzhali said...

இனி சிடி மேல இது சினிமா சிடி இல்லை என்று எழுதிப்போடுங்க‌

BOSS said...

வாங்க குழலி
இனி நீங்க சொல்ற படி தான் செய்யணும் போல !

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அதை எடுத்தவர் குழந்தை அல்ல!. அது உங்களுடையதெனத் தெரிந்தே எடுத்துள்ளார். அதாவது திருடியுள்ளார். அவரை சற்று அச்சுறுத்தியிருக்க வேண்டும். பேருந்து நடத்தினரிடம் விபரம் கூறியிருக்க
வேண்டும். இப்படி பொறுத்தருளுதலே மேலும் பல தவறுகளுக்கு வழி கோலுகிறது.

BOSS said...

வாங்க யோகன் , நீங்க சொல்லியது எனக்கும் தோனியது பிறகுதான்

Anonymous said...

சி டி ல குருவி தமிழ் படம் என்று எழுதி வையுங்கள், பல மாசம் சென்று வந்தாலும் ஒருவனும் தொடமாட்டான்

BOSS said...

ஹா ஹா ஹா ? !