கியூட் வடிவத்தில் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்


பல புதிய மொபைல் நிறுவனங்களும் கூட மிக சிறந்த தொழில் நுட்பங்களை உருவாக்கி கொடுத்து கொண்டு இருக்கிறது. கிகாபைட் நிறுவனமும் அது போல் தனது நவீன தொழில் நுட்பம் கொண்ட ஜி-ஸ்மார்ட் மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இது டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன். வாடிக்கையாளர்களுக்கு
பயன்படுத்தும் ஆர்வத்தினை தூண்டும் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜெர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் சுலபமாக இயங்க இதில் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.  அனைத்து வசதிகளையும் தறம்பட கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதியை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். இதன் டிஎப்டி தொழில் நுட்பம் கொண்ட திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும்.
கேமரா வசதியும் இதில் சிறப்பான புகைப்படத்தை கொடுக்க 5 மெகா பிக்ஸல் கேமரா வசதியை வழங்கப்பட்டுள்ளது.  2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியை பயன்படுத்த எளிதான முறையில் சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ஏ2டிபி வி2.1 புளூடூத் வசதியினையும் அளிக்கும். ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர், கேம்ஸ், எப்எம் ரேடியோ போன்ற ஏராளமான வசதிகளையும் இந்த ஜி-ஸ்மார்ட் G1355 ஸ்மார்ட்போன் வழங்கும்.
இதன் மைக்ரோஎஸ்டி மெமரி கார்டு 32ஜிபி வரை எக்ஸ்டர்னல் வசதிக்கு சப்போர்ட் செய்யும். இது ஸ்மார்ட்போன் என்பதால் பிரவுசிங் வசதியை பற்றி கேட்கவே வேண்டாம். இதில் ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்ப வதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போனில் 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 105 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினை வழங்கும் 1,500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் வேர்ல்டு கண்காட்சியில் இன்னும் சிறப்பான அறிமுகத்தை பெறும் என்று நம்பப்படும் ஜி-ஸ்மார்ட் ஜி-1355 ஸ்மார்ட்போன் இந்த மாதத்தின் முடிவில் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Post a Comment

1 Comments

நல்ல தகவல் ! நன்றி நண்பரே !