நானே முக்கிய காரணம் என்கிறார் தோனி


ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியில் 2 வது முறை இன்னிங்ஸ் தோல்வியை இந்தியா சந்திருக்கிறது . மொத்தம் 4 போட்டிகளில் 3 போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதால் ஆஸி., 3. 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்த தொடரை வென்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 161, ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்தன. பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் முடிவில், 4 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிட் (32), கோஹ்லி (21) அவுட்டாகாமல் இருந்தனர்.இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் விராத் கோஹ்லி அரைசதம் அடித்தார். கோஹ்லி 75 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராவிட் (47) அரைசத வாய்ப்பை கோட்டைவிட்டார். அடுத்து வந்த கேப்டன் தோனி (2) மீண்டும் ஏமாற்றினார்.

இரண்டாவது இன்னிங்சில் இன்று 3 வது நாளில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸி., இந்த போட்டியிலும் ஒரு இன்னிங்ஸ் 37 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஏற்கனவே 2 வது போட்டியும் ஆஸி., இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. மொத்தம் 4 போட்டிகளில் 3 -ஐ ஆஸி வென்று, தொடரை 3. க்கு 0 என்ற கணக்கில் வென்றது.

முதலிடமே எங்கள் இலக்கு என்கிறார் கிளார்க் : பெர்த் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க்; தொடரை வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து அடிலெய்டு டெஸ்ட்போட்டியிலும் வெற்றி பெற முயற்சிப்பதே எங்களது தற்போதைய பணி. டெஸ்ட் தொடரில் முதலிடம் பிடிப்பதே ஆஸ்திரேலியாவின் இலக்கு என்றார்.

மோசமான காலக்கட்டம் என்கிறார் தோனி: தொடர் தோல்வி குறித்து பத்திரிகையாளர்களிடம் இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்; பேட்டிங் பலவீனமாக உள்ளது. இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலக்கட்டம் இது. கேப்டன் என்ற முறையில் இந்திய அணியின் தோல்விக்கு என்னை தான் குறை கூற வேண்டும். நானே முக்கிய காரணம். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கொள்கிறேன் என கூறினார்.

Post a Comment

0 Comments