செவ்வாய் கிரகத்தில் வாழ முடியும்!

வெப்பம் மற்றும் அழுத்தத்தில் பூமியை போலவே பெரும்பகுதியை கொண்ட செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியம் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக வானியல் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியர் சார்லி லைன்வீவர். இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வசிக்க முடியுமா என்பது பற்றி தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இதுபற்றி லைன்வீவர் கூறியதாவது: பூமியின் மொத்த அளவில் 1 சதவீதம் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் தட்பவெப்பம், அழுத்தம் ஆகியவற்றை போலவே செவ்வாய் கிரகத்தின் 3 சதவீத இடங்கள் உள்ளன. மீதி பகுதி முழுவதும் புதைந்த நிலையில் காணப்படுகிறது. பூமியின் 1 சதவீத பகுதியில் உயிரினங்கள் ஆக்கிரமித்துள்ளதை போல, அதே வெப்பம், அழுத்தம் கொண்ட செவ்வாயின் 3 சதவீத பகுதியில் உயிர்கள் வசிப்பது சாத்தியம்.

செவ்வாயின் துருவங்களில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பூமியில் உள்ள அளவுக்கு இருக்குமா, அங்கு உயிரினங்கள் குடியேறினால் அவற்றுக்கு தேவையான அளவு இருக்குமா என்பது பற்றி தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது.

Post a Comment

0 Comments