ஸ்கைப்பை வாங்குகிறது மைக்ரோ சாஃப்ட்


இணையதளத்தின் மூலம் தொலைபேசி மற்றும் வீடியோ உரையாடல்களை மேற்கொள்ள வழி செய்யும் சேவையான ஸ்கைப்பை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எட்டரை பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 36 ஆண்டு கால வரலாற்றில் மிகப் பெரிய வர்த்தக் கொள்முதல் இதுவேயாகும்.ஸ்கைப்பின் மூலம் மாதமொன்றுக்கு நூற்றி எழுபது மில்லியன் மக்கள், இணையதளத்தின் வழியாக ஒலி மற்றும் ஒளி வடிவிலான உரையாடல்களை மேற்கொள்கின்றனர்.இதன் மூலம் இந்தப் பெருந்தொகையானவர்கள் மைக்ரோ சாஃப்ட் மென் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் கூடுவார்கள்.

ஸ்கைப்பை தனது எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு கன்சோல், அவுட்லுக் மின்னஞ்சல் செயற்பாடுகள் மற்றும் அதிநவீன தொலைபேசிகளின் பயன்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளும் என மைக்ரோ சாஃப்ட் கூறியுள்ளது.ஸ்கைப்புக்கு உள்ள இளைமைத் தன்மை, அதை பலதரப்பட்ட சமூக மக்கள் பயன்படுத்துவது போன்ற நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும் என மைக்ரோ சாஃப்ட் நம்பக் கூடும் என பிபிசியின் தொழில்நுட்பச் செய்தியாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments