எந்திரன் 2 இல் அர்னால்டு நடிப்பாரா?

எந்திரன் 2 படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். இந்தப்படத்தில் ஹாலிவுட்நடிகர் அர்னால்டை நடிக்கவைக்கப் பலமுறை பேச்சுகள் நடந்துவிட்டனவாம். கடைசிக்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
இயக்குநர் ஷங்கரின் உறவினர் பப்பு என்பவர் அர்னால்டுடன் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் நூறுகோடியை அவர் சம்பளமாகக் கேட்பதாகவும் அதை முடிந்த அளவு குறைக்கும் முயற்சியில் படக்குழுவினர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
 ஓரிரு நாளில் இந்தப்பேச்சு இறுதிக்கட்டத்தை அடைந்துவிடுமென்று சொல்லப்படுகிறது. அர்னால்டின் சம்பளம் காரணமாக இந்தப்படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடியாகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. அர்னால்டு நடிப்பதால் படம் மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்று நம்பி லைகா நிறுவனம் அந்தச்செலவைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  மேலும் படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பது சிறப்புச் செய்தி

No comments: