ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 14 இந்தியக் குடும்பங்கள்

ஆசியாவைச் சேர்ந்த 50 மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 14 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்பானி குடும்பம் 14.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆசியா நாடுகளில் வேறு எந்த நாட்டையும் விட, இந்தியா தான் 50 பணக்காரர்களில் 14 இடங்களைப் பிடித்துள்ளது.
அம்பானியைத் தவிர, முதல் 10 இடங்களில் பிரேம்ஜி குடும்பம் 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 7வது இடத்திலும், மிஸ்த்ரி குடும்பம் 14.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும், கோத்ரேஜ் குடும்பம் 15வது இடத்தையும், அர்செலர் மிட்டல் குழுமம் 19வது இடத்தையும், பிர்லாஸ் 22வது, பஜாஜ் 29வது, டாபர்  இந்தியா 30வது, காடிலா ஹெல்த்கேர்ஸ் பட்டேல் 33வது, எய்சர் குழுமம் 40வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதே போல, ஸ்ரீ சிமெண்டின் பங்கர் குடும்பம் 42வது, ஜிண்டால் குடும்பம் 43வது, முஞ்சாய் குடும்பம் 46வது, சிப்லாவின் ஹமீட்ஸ் குடும்பம் 50வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் இடத்தை லீஸின் சாம்சங் குழுமம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: