உலக அளவில் பணியாளர்களை இணைக்கும் சமூக வலைதளமாக லிங்க்டு-இன் செயல்பட்டு வருகிறது. பொழுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்ற சமூக வலைதளங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சேவையை வழங்கி வரும் இந்த நிறுவனம் திறமை வாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்ய அரிய வாய்ப்பை வழங்கி வருகிறது.
இதேபோன்று, வேலை தேடுவோருக்கும் நிறைந்த பயனை அளித்து வருகிறது. இந்த நிலையில், அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்கும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது லிங்க்டு-இன்.
ஆம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வரும் ஆபிஸ்13 இயங்கு தளத்தை பயன்படுத்துவோர் எளிதாக லிங்க்டு-இன் சேவையை பெறும் வகையில் பிரத்யேக வசதியை உருவாக்கி வருவதாக லிங்க்டு-இன் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் அவுட்லுக் மூலம் லிங்க்டு இன் தளத்திற்குள் வருபவர்கள் பணியாளர்களின் பயோ டேட்டா மற்றும் புகைப்படங்களை எளிதாக பெற முடியும் என்று தெரிவித்துள்ளது லிங்க்டுஇன்.
லிங்க்டுஇன் அப்ளிகேஷனை தனியாக டவுன்லோடு செய்ய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆபிஸ்13 இயங்குதளத்தை பயன்படுத்துவோர் லிங்க்டுஇன் மூலம் எளிதாக பணியாளர்களை தேர்வு செய்யவும், மறுபக்கம் புதிய நிறுவனங்களில் வேலைக்கு சேரவும் ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments