சூர்யா புராணம் பாடும் ரசிகைகள்

காலேஜ் நாட்களில் உங்க பாட்டு டிவியில வந்தாலே உங்களைப் பார்க்க ஓடோடி வருவோம். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க கூட டான்ஸ் ஆடிக்கிறேன். இதெல்லாம் என்ன வென்று பார்க்கிறீர்களா? நீங்களும் வெல்லலாம் ஒருகோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்கள் நடிகர் சூர்யாவிடம் பேசும் வார்த்தைகள்தான் இவை. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சியின் டிஆர்பியை கூட்டுவதற்காக ஒரு இளம் பெண் சூர்யாவை முத்தமிட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இவற்றை பார்க்கும் போது தமிழ்நாட்டுப் பெண்கள் எந்த அளவிற்கு முன்னேறிவிட்டார்கள் என்பதை கண்கூடாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை சூர்யா நடத்துகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு அதிகரிக்கத்தான் செய்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போதுதான் இது அதிகமாக சூர்யா புராணம் பாடும் நிகழ்ச்சியாக மாறிக்கொண்டு வருகிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் என்றாலும் சரி, லைப்லைனில் வருபவர்கள் என்றாலும் சரி ஒரே சூர்யா புராணம்தான். விஜய் டிவி நிறுவனத்தினர் அதை கொஞ்சம் எடிட் செய்தாவது போடலாம். இதில் சூர்யாவை குறை சொல்ல முடியாது அவர் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்கிறார் என்பதை முக்கியமாக குறிப்பிட்டே ஆகவேண்டும்.ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடும்ப குத்துவிளக்குகள் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது அவர்களின் குடும்பத்தினர் எந்த அளவிற்கு இதை சகித்துக்கொள்கின்றனர் என்பது அவர்களின் குடும்பத்தினருக்கே வெளிச்சம்.

எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் அதன் தொகுப்பாளரோ, ஒருங்கிணைப்பாளரோ அவர்களுக்கு என்று ஒரு எல்லை இருக்கும். ஆண் நடிகர் என்பதால் கொஞ்சம் அதிகமாக நடந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை. இதேபோல இந்த நிகழ்ச்சியை ஒரு தமிழ் நடிகை நடத்தினால் அந்த நடிகையை கட்டிப்பிடிக்கவோ, நடனமாடவோ தமிழ்நாட்டு இளைஞர்களை அனுமதிப்பார்கள் என்றும் கூற முடியாது. எனவே நிகழ்ச்சி தயாரிப்பாளர்களே யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நிகழ்ச்சியை ஒளிபரப்புங்கள் என்பது பாதிக்கப்பட்ட ஆண் நேயர்களின் கோரிக்கையாகும்.

Post a Comment

2 Comments

சரியாச் சொன்னீங்க சார் !
chicha.in said…
hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in