சுக்குநூறான 20 கோடி ரூபாய் அஸ்டன் மார்ட்டின் கார்


சீனாவில் அதிவேகத்தில் சென்ற அஸ்டன் மார்ட்டின் சூப்பர் கார் விபத்தில் சிக்கி சுக்குநூறான தகவல் அந்நாட்டு  இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் கார்கள் உலக அளவில் புகழ்பெற்றதாக திகழ்கிறது. ஜேம்ஸ்பாண்ட் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படும் கார்கள் என்பதால் இந்த கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பு இருக்கிறது.

இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் ஒன்-77 என்ற கார் மாடலை ஸ்பெஷல் எடிசனாக அஸ்டன் மார்ட்டின் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்தது. வெறும் 77 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இந்த காரை அஸ்டன் மார்ட்டின் டெலிவிரி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் சமீபத்தில் டெலிவிரி கொடுக்கப்பட்ட அஸ்டன் மார்ட்டின் ஒன் 77 கார் ஒன்று அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. அதில் இருந்தவர் நிலை குறித்த விபரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை.

ஒரு லாரியில் பின்னால் ஏற்றப்பட்ட அந்த காரின் முன்பக்கம் முற்றிலும் உருக்குலைந்து இருந்தது. அதை ஒருவர் படமெடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த கார் டெலிவிரி கொடுக்கப்பட்டு வெறும் ஒரு வாரமே ஆகியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த லிமிடேட் எடிசன் அஸ்டன் மார்ட்டின்  ஒன் 77 காரில் 7.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 522 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதிவேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த இந்த காரை ஓட்டியவர் கட்டுப்படுத்த தெரியாமல் ஓட்டியதால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட அஸ்டன் மார்ட்டின் கார் விபத்தில் சிக்கி சுக்குநூறாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

1 Comments

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in