இந்தியாவில் ஆப்பிளின் ஐபேடுகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. மேலும் இந்தியாவில் ஏராளமான ஆப்பிள் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் இதுவரை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் களமிறங்க இருக்கிறது. கண்டிப்பாக ஆப்பிளின் இந்திய ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வரும் ஏப்ரல் 27 முதல் இந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் கிடைக்கும் என்று ஆப்பிள் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் அதன் விலையையும் அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அதன்படி 16ஜிபி அளவுள்ள புதிய ஐபேட் ரூ.30500க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் 36500க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.42500க்கு விற்கப்படும்.
அடுத்ததாக வைபை+ மற்றும் 4ஜி வசதியுடன் வரும் 16ஜிபி ஐபேட் ரூ.38900க்கு விற்கப்படும். 32ஜிபி ஐபேட் ரூ.44900க்கு விற்கப்படும். 64ஜிபி ஐபேட் ரூ.50900க்கு விற்கப்படும்.
இந்த புதிய ஐபேடின் முக்கிய விசேஷம் என்னவென்றால் இது புதிய ரெட்டினா டிஸ்ப்ளே, க்வட் கோர் க்ராபிக்சுடன் கூடிய ஆப்பிளின் புதிய எ5எக்ஸ் சிப், 5 மெகா பிக்சல் ஐசைட் கேமரா மற்றும் 1080 எச்டி வீடியோ வசதி மற்றும் 10 மணி நேர இயங்கு நேரம் போன்றவற்றைக் கொண்டு வருகிறது. இந்த புதிய ஐபேட் இந்தியாவில் வெற்றிக் கனியைப் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 Comments