ஜாவேத் அக்தரும் கொலவெறி பாடலுக்கு எதிர்ப்பு


இந்தப் பாட்டு ஹிட்டானதில், தனுஷின் ஆட்டமும் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது.

சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பிரதமர்கள் என பெரிய மனிதர்களின் நட்பும் அரவணைப்பும் இந்தப் படம் மூலம் தனுஷுக்குக் கிடைத்தாலும், கடும் சர்ச்சைகள், எதிர்ப்புகளுக்கும் பஞ்சமில்லை.

இந்தப் பாடல் வெளியான உடனேயே பெண்கள் அமைப்பிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் இலக்கியவாதிகள் கடுமையாக விமர்சித்தனர். உலகளவில் பிரபலமாகும் அளவிற்கு தரமான பாடலா? என்று கேள்வி எழுப்பினர் சிலர். ரசிகர்களை முட்டாளாக்கிவிட்டனர் என்று கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் கொலவெறி பாடலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.

"எந்தவொரு பாடலாக இருந்தாலும் கொஞ்சமாவது அர்த்தமும், பொருளும் இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே இல்லாத பாடல் ஒன்று என்றால் அது 'ஒய்திஸ் கொலவெறி டி...' பாடலாகத்தான் இருக்க முடியும்.

இது அர்த்தமற்ற ரசனையாக உள்ளது. நல்ல அர்த்தங்களும், தத்துவங்களும் நிறைந்த பாடல்கள் ஏராளம் உள்னன. அவற்றுக்கு கூட இவ்வளவு வரவேற்பு இல்லை. இந்த பாடலுக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதன் மீதான ரசனையை என்ன வென்று சொல்வது?" என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments