ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு கர்நாடகா அளித்தது பாராட்டு

ஆட்டோவில் விட்டுச் சென்ற ஐந்து லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்த, தமிழகம் வேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டுரங்கனை, பெங்களூரு நகர போலீஸ், மாநகராட்சி மேயர் கவுரவித்தனர். தமிழகம், வேலூர் மாவட்டம், பெருமாள் குப்பத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். பெங்களூரில் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன், தன் ஆட்டோவில் பயணித்த பிஜாப்பூரை சேர்ந்த ராமாச்சார்யா, விட்டு சென்ற ஐந்து லட்ச ரூபாயை, அவரிடம் டிரைவர் பாண்டுரங்கன் ஒப்படைத்தார். இதையடுத்து, ஆட்டோ டிரைவர் பாண்டுரங்கனை, 
                           பெங்களூரு போலீஸ் உதவி கமிஷனர் சோனி, பாராட்டி பத்திரம் வழங்கினார். மேலும், பெங்களூரு மாநகராட்சி மேயர் சாரதம்மா, பாண்டுரங்கனை பாராட்டி, அவரது குடும்பத்தினர் ஐந்து பேர் பயன் பெறும் வகையில், இரண்டு லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ சேவை காப்பீட்டை வழங்கினார். மேலும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கவும், மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பாண்டுரங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள். உங்களின் பதிவுக்கு வாழ்த்துக்கள். + குடியரசு தின வாழ்த்துக்கள்! நன்றி சார் !