கலெக்டர் அலுவலகம் வந்தபெண்ணிடம் கைக்குழந்தை திருட்டு


கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்த பெண்ணிடம், கைக்குழந்தையை நூதன முறையில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் தோகமலை கிருஷ்ணாபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன், 35; கூலி தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று காலை, 11 மணிக்கு, மனைவி சுமதி மற்றும் பிறந்து, 35 நாளே ஆன குழந்தை மதுரை வீரனுடன், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தார்.

அப்போது, அவர்களை அணுகிய மூன்று பெண்கள், "பச்சிளம் குழந்தைத் திட்டத்தின் பேரில் கைக்குழந்தைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை நிதி கொடுக்கின்றனர். அதை நாங்கள் வாங்கி தருகிறோம்' என, முருகன் மற்றும் சுமதியிடம் தெரிவித்துள்ளனர்.அதை உண்மை என நம்பிய முருகனிடம், 700 ரூபாயை கொடுத்த அந்த பெண்கள், "ரேஷன் கார்டு மற்றும் போட்டோ கொண்டு வர வேண்டும்' என கூறியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட முருகன், ரேஷன் கார்டை எடுத்து வர தோகமலைக்குச் சென்று விட்டார்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்கள், சுமதியை அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்துள்ளனர். பின்னர் கைக்குழந்தையை எடைபோட்டு கொண்டு வருவதாக வாங்கி சென்றவர்கள், பல மணி நேரமாகியும் திரும்பி வரவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, அருகிலுள்ள மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்று புகார் செய்தார். குழந்தையை பறிகொடுத்ததால் தாய் சுமதி கதறியழுதது பரிதாபமாக இருந்தது.


குழந்தை திருட்டு:அக்காள், தங்கை கைது:கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்த பெண்ணிடம், கைக் குழந்தையை கடத்திய சம்பவத்தில், குழந்தையை கடத்திய, அக்காள், தங்கை இருவர் கைது செய்யப்பட்டனர்.கரூர், தோகைமலை கிருஷ்ணாபட்டி முருகன், 35, மனைவி சுமதி மற்றும் பிறந்து, 35, நாட்களான குழந்தை மதுரை வீரனுடன், கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்த போது, குழந்தையை 3 பெண்கள் நூதன முறையில் கடத்தினர்.

கரூர் , மாயனூரில் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்த சோமூர் சிவகாமி, 45,யிடம் பெண்ணிடம் போலீசார் விசாரித்ததில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்த பெண் என்பது தெரிந்தது. இதை தொடர்ந்து, சிவகாமியை கைது செய்த போலீசார், அவரதுதங்கை கலைச் செல்வியை நங்கவரம் செல்லும் வழியில் பெட்டவாய்த் தலையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கரூர் கலெக்டர் ÷ஷாபனா, மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தையை பெற்றோரிடம் நேற்றிரவே ஒப்படைத்தார். 

Post a Comment

0 Comments