பேஸ் புக் தோழி பிரிந்ததால் தற்கொலை& விவகாரத்து

by 12:45 PM 0 comments

பேஸ் புக் நட்பு வட்டத்தில் இருந்து தோழி பிரிந்ததால், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இங்கிலாந்தின் குளோஸ்டெர்ஷைர் பகுதியில் உள்ளது ஹைட்.இங்கு வசித்தவர் சைமன் பாக்ஸ்லே. வயது 21. சமூக இணையதளமான பேஸ் புக்கில் இவர் பலருடன் நட்பு வைத்திருந்தார். அவர்களில் இளம்பெண் ஒருவரும் இருந்தார்.

அவர் மீது சைமனுக்கு காதல் ஏற்பட்டது. தனது எண்ணத்தை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தினார். அவ்வளவுதான், தனது பேஸ் புக்கில் இருந்து 'நண்பர்' என்ற தொடர்பை அந்த பெண் துண்டித்துக் கொண்டார்.

விரக்தி அடைந்த சைமன், மற்ற நண்பர்கள் மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அந்த நண்பர்களும் சைமனை தரக்குறைவாக பேசினர்.

'பெண்ணை தொந்தரவு செய்யாதே', 'செத்து தொலை' போன்ற எஸ்எம்எஸ்.களையும் நண்பர்கள் அனுப்பி கடுமையாக எச்சரித்தனர்.
அதில் மனம் உடைந்த சைமன், வீட்டு தோட்டத்தில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அந்த பெண்ணுக்கு எழுதிய கடிதத்தில், 'எனக்காக நீ செய்த எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார் என்று டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
**********

உலகம் முழுவதும் நடக்கும் 3ல் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக்தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் கென்னன் கூறியுள்ளார்.

இது பற்றி, டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீத வழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக்  இடம்பெற்றது.

எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 புகார்களில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.பேஸ்புக் பக்கங்களில் தங்கள் நண்பர்களுடன் பலர் மனம் திறந்து தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
அவற்றில் தங்கள் முன்னாள் காதல், கள்ளக் காதல், அலுவலக நட்பு ஆகியவை பற்றி தெரிவிக்கின்றனர். இவை வாழ்க்கை துணைக்கு தெரிய வரும்போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது.

விவாகரத்தில் முடிகிறது. மேலும், பேஸ்புக் தொடர்பு மூலம் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தவும், காதலை வெளிப்படுத்தவும் எளிதாக முடிகிறது.
அதை வாழ்க்கை துணையிடம் இருந்து மறைக்க முயன்றாலும் நண்பர்கள் அல்லது பேஸ்புக் பக்கத்தில் தேடுவதன் மூலம் கணவர் அல்லது மனைவியால் கண்டுபிடித்து விட முடிகிறது.
விவாகரத்து வழக்கில் பேஸ்புக் பதிவுகளை சாட்சியாக காட்டுவோர் அதிகரித்துள்ளதே இதற்கு சாட்சி. இவ்வாறு டெய்லி மெயில் செய்தி தெரிவிக்கிறது.calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: