துபாய் ஏர்போர்ட்டில் 24 மணி நேர விசா சேவைகள்

by 11:10 PM 1 comments

விசா நடைமுறைகளை -தங்குமிட விசா (Residency Visa) உட்பட- கவனிக்க புதிய விசா சென்டர் ஒன்று துபாய் ஏர்போர்ட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகருக்கு உள்ளே இயங்கும் விசா அலுவலகத்துக்கும் இதற்கும் இடையேயுள்ள பெரிய வித்தியாசம், ஆபரேஷன் அவர்ஸ்! தினமும் 24 மணி நேரமும் இயங்கும் இந்த விசா சென்டர், வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும்.
துபாய் ஏர்போர்ட் - டர்மினல் 3
அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டவர்களின் விசா அலுவல்களைக் கவனிக்கும் துறை GDRFA (Director General of the General Directorate for Residency and Foreigners Affairs) டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் மொஹமட் அல்-மெரி, “இந்த அலுவலகம், பொதுமக்களுக்காக 24 மணி நேரமும் திறந்திருக்கும். துபாய் ஏர்போர்ட் டர்மினல்-3 கேட் இலக்கம் 2-க்கு அருகேயுள்ள அலுவலகத்துக்கு வந்து, விசா தொடர்பான அனைத்து ட்ரான்ஸாக்ஷன்களையும் செய்து கொள்ளலாம்” என்கிறார்.

இவர்கள் இந்த ஏர்போர்ட் விசா சென்டரில் டீல் பண்ணவுள்ள விசா ரகங்கள் எவையென்று பார்த்தால், கிட்டத்தட்ட அனைத்து டைப் விசாக்களும் பட்டியலில் உள்ளன. Residency Visa, Visit Visa, Entry Permits, Domestic Helper Visa, ஆகிய டைப் விசாக்கள் தொடர்பாக அனைத்து அலுவல்களும் இங்கே கவனிக்கப்படும். அத்துடன், Amendments of Statutes, Visa Cancelations ஆகியவை தொடர்பாகவும் இங்கே வரமுடியும். விசா தொடர்பாக விதிக்கப்பட்ட அபராதங்களையும் இங்கே வந்து செலுத்த முடியும்.

“துபாய் ஏர்போர்ட் விசா சென்டர், அனைத்து விடுமுறை தினங்களிலும் திறந்திருக்கும்” என்கிறார் ஷேக் அஹ்மட் அல்-மக்டோம். இவர்தான் துபாய் விமான நிலையத்தின் (துபாய் சிவில் ஏவியேஷன்) தலைவர் மற்றும், டிமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சி.இ.ஓ.

“அதிகாலை 3 மணிக்கு ஒருவர் வந்தாலும், அவரது ரெசிடென்சி விசாவை நீடிப்பது அல்லது புதிய விசா வழங்கும் நடைமுறை 20 நிமிடங்களில் முடிந்துவிடும். GDRFA தலைமைச் செயலகத்தில் இருந்து 15 அதிகாரிகளை இங்கு பணிபுரிய நியமித்துள்ளோம். இந்த விசா சென்டரின் சேவை இங்கு வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, துபாய் ஏர்போர்ட் ஊடாக பயணம் செய்பவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும் கூறுகிறார் அவர்.
24 மணிநேர தொலைபேசி சேவையும் உண்டு. தொலைபேசி இலக்கம் – 04-7075388

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

1 comments:

Faaique Najeeb said...

நல்ல செய்தி கொண்டு வந்துள்ளீர் நண்பரே!!