பில்லா2 பரபரப்பு தகவல்கள்!

by 2:53 PM 5 comments
மங்காத்தா' படத்தினை தொடர்ந்து 'பில்லா - 2' படத்தில் நடித்து வருகிறார் அஜீத், 'உன்னைப்போல் ஒருவன்' படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி வருகிறார். பார்வதி ஒமணக்குட்டன் அஜீத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

'பில்லா 2' குறித்து படத்தின் இயக்குனர் சக்ரி டோல்டி தனது டிவிட்டர் இணையத்தில் " 'பில்லா 2' படத்தினை EPIC கேமிரா மூலம் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ஆசியாவில் 'பில்லா 2' படம் தான் முதன் முதலில் அந்த கேமிராவை பயன்படுத்தி உள்ளது.

படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்துமே அஜீத் டூப் இல்லாமல் செய்து இருக்கிறார். அவரது உழைப்பு கண்டிப்பாக அஜீத் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும்.

'பில்லா 2' படத்தில் யுவன் உழைப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'பில்லா 2' படத்தின் பாடல்கள் கண்டிப்பாக வரவேற்பை பெறும் " என்று தெரிவித்துள்ளார்.


அஜித், பார்வதி ஒமணக்குட்டன் நடிப்பில் தயாராகும் படம் ‘ பில்லா-2′. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை இந்துஜா குழுமத்தின் IN Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. ‘பில்லா’ மற்றும் ‘மங்காத்தா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால், இப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘பில்லா-2′ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடித்து படக்குழு ஊர் திரும்பிவிட்டது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு பனிமலையில் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
*******************

‘பில்லா-2′ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராஜசேகர் ” அஜித்துடன் நான் ‘ரெட்’ படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகுகிறார். நடிப்பைப் பொருத்தவரை ‘ரெட்’ படத்தை விட இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறார். இப்படத்தின் மொத்த காட்சிகளையும் சக்ரி முன்னரே தெளிவாக, தயாராக வைத்திருந்ததால், பட படப்பிடிப்பு வேலைகள் எளிதாக சீக்கிரம் முடிந்தது. ” என்று கூறியுள்ளார்.

படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற பணிகள் முடித்து, பொங்கலுக்கு டிரெய்லர் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘பில்லா-2′ 2012 கோடை விடுமுறையின் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

5 comments:

Online Works For All said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

Online Works For All said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

Online Works For All said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

Online Works For All said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

Online Works For All said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj