கிருஷ்ணராயபுரம் தாலுகா பகுதி வழியாக செல்லும், கோவை மண்டல த்தை சேர்ந்த அரசு பஸ்கள், அப்பகுதிகளில் நிறுத்தப்படாததால், பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் தாலுக்காவுக்குட்பட்ட பகுதிகளான லாலாப்பேட்டை, மகாதானபுரம், மாயனூர் ஆகிய முக்கியமான வழித்தடங்களில், கோவை மண்டலத்தை சேர்ந்த அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கரூர் மற்றும் குளித்தலையிலிருந்து லாலாப்பேட்டை, மகாதானபுரம், மாயனூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல பயணிகள் பஸ் ஏறும்போது,
பஸ் நிற்காது என டிரைவர் மற்றும் கண்டக்டர் பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விடுகின்றனர்.
இதனால் பெரும்பாலான ப ஸ்கள் காலியாக செல்கிறது. மேலும், "கோவை, திருச்சி, கா ரைக்குடி, கும்பகோணம் போன்ற டெப்போக்களை சேர்ந்த அரசு பஸ்கள், மகாதானபுரம் பஸ்ஸ்டாப்பில் நின்று செல்ல வேண்டும்' என பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, டெப்போக்களுக்கு நகல் அனுப்பட்டுள்ளது. எனவே, "கிருஷ்ணராயபுரம் பகுதி மக்களின் நலன் கருதியும், நஷ்டத்தை தவிர்க்கும் விதமாகவும், அனைத்து அ ரசு பஸ்களும் முறையான பஸ் ஸ்டாப்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நடவடிக்கை எடு க்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments