பள்ளிக் கல்வித் துறையில் 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

by 8:00 AM 0 comments
பள்ளிக் கல்வித் துறை யில், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், நூலகர்கள், ஆசிரி யரல்லா பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் என, மொத்தம் 56 ஆயிரத்து 853 பேரை நியமிக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அவர்களை நியமிக்க, கல்வித் துறை முனைந்துள்ளது.

வழக்கு: மாநில அளவிலான பதவி மூப்பு மூலம், ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஆட்சியில் இவ்வழக்கில், அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்யாமல் இருந்தது. தற்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் மூலம், பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் வரும் எனத் தெரிகிறது.

இவ்வழக்கின் தீர்ப்பை பொறுத்து தான், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதா அல்லது போட்டித் தேர்வு மூலம் நியமிப்பதா என்பது தெரியவரும். எனினும், தற்போது கட்டாய கல்விச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன்படி, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் முடிவு வரும் வரை, பள்ளிகளில் வழக்கமான சம்பள விகிதத்தில் நியமிக்கப்படும் ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையிலேயே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களை பொறுத்தவரை, அந்தந்த துறைத் தலைவர் மூலம், அரசு வெளியிடும் வழிகாட்டுதலின் அடிப்படையில், நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர்.

பணியிட அறிவிப்பு விவரம்

♦  சிறப்பாசிரியராக நியமிக்கப்பட உள்ளவர்களில், தமிழாசிரியர்கள் 1,000 பேர் உட்பட, உடற்கல்வி ஆசிரியர்களும் அடங்குவர்.

♦  பகுதி நேர ஆசிரியர்களில் பெரும்பாலானோர், ஓவியம், தையல், கைவினை, உடற்கல்வி போன்ற பயிற்றுனர்களாக நியமிக்கப்படுகின்றனர். பள்ளியில் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமெனில், இதற்காக மாதம், 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இரண்டு பள்ளிகளுக்கும் சேர்த்து ஒருவரே நியமிக்கப்பட்டால், அவருக்கு, ஆறு மணி நேர வேலைக்கு, 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கிரேடு-3 தகுதிக்கு, நூலகர்கள் பணியிடங்கள் உயர்த்தப்பட உள் ளன. மேலும், புதிதாக 1,093 நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை நிரப்ப, வேலைவாய்ப்புத் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
♦  ஆசிரியரல்லா பணியிடங்களான துப்புரவு பணியாளர்கள், 5,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இதில், 3,000 பணியிடங்கள் தான் ஒப்புதல் பெற்றவை. தற்போது,2,000 பணியிடங்கள் கூடுதலாக ஒப்பளிக்கப்பட்டுள் ளது.

♦  உதவி தொடக்க கல்வி அதிகாரி பணியில், 34 பேரை நியமிக்க, தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப் பதவிக்கு இதுவரை, 70 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

♦  இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு ஆசிரியர் பணியிடங்கள், 1,800 நிரப்பவும், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
பணியிடம்எண்ணிக்கை
இடைநிலை கல்வி ஆசிரியர்கள்7,907
பட்டதாரி ஆசிரியர்கள்15,525
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்5,869
சிறப்பாசிரியர்கள்1,538
வேளாண் பயிற்றுனர்கள்25
பகுதி நேர ஆசிரியர்கள்16,549
மேம்படுத்தப்படும் நூலகர் பணியிடம்260
புதிய நூலகர் பணியிடங்கள்1,093
ஆசிரியரல்லா ஊழியர்கள்5,000
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்831
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்34
ஆசிரியர் பயிற்றுனர் சீனியர் விரிவுரையாளர்கள்34
இளநிலை உதவியாளர்கள் மற்றும் லேப் உதவியாளர்கள்388
பின்னடைவு பணியிடங்கள்1,800

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: