வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க


"வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு, சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.


மேலும், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2012 ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல், இன்று(நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ள இப்பட்டியலின் படி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், பெயர் மற்றும் முகவரியில் உள்ள பிழை திருத்தம் போன்ற மாற்றங்களை, வாக்காளர்கள் செய்து கொள்ளலாம். வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், 18 வயது பூர்த்தி அடைவோர், தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இவற்றுக்குரிய படிவங்களை, அனைத்து ஓட்டுச் சாவடிகள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலங்கள் ஆகிய இடங்களில் பெறலாம். பூர்த்தி செய்த படிவங்களை, அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். படிவங்கள் சரிபார்ப்புப் பணி, அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கும். புதிய வாக்காளர் பட்டியல், 2012 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். புதிய வாக்காளர் அடையாள அட்டை, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும்.


அனைத்துக் கல்லூரிகளிலும், தாசில்தார், ஆர்.டி.ஓ.,க்களை கொண்டு, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் கல்லூரி மாணவர்கள், அதற்கான படிவத்தை தங்கள் கல்லூரிகளிலேயே பெற்று, அங்கேயே தரலாம். வரும் 30ம் தேதி, அடுத்த மாதம் 6ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு, சிறப்பு முகாம் நடைபெறும். கிராம சபைகளில், அடுத்த மாதம் 2ம் தேதி, வாக்காளர் பட்டியல் வாசிக்கப்படும்.


தமிழகத்தில், தற்போது நான்கு கோடியே 73 லட்சத்து 45 ஆயிரத்து 489 வாக்காளர்கள் உள்ளனர். இது, மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 65.6 சதவீதம். வாக்காளர் பட்டியலில், 1,000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி, இன்னும் முடிவாகவில்லை. வரும் ஏப்ரல் 21ம் தேதிக்குள், இத்தேர்தல் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில், சில வாக்காளர்களின் பெயர் இரு இடங்களில் இடம் பெற்றுள்ளது. இத்தவறு, புதிய வாக்காளர் பட்டியலில் சரி செய்யப்படும். இவ்வாறு, பிரவீன்குமார் கூறினார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிகாக தனது தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளம்பியது. இந்தநிலையில் தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வங்கிகள் நிதி கையாளுதலை தடை செய்துள்ளன. இதனால் எங்களது செயல்பாடுகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எங்களது செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

எங்களது தளத்தை முடக்க சிலர் முயற்சிக்கின்றனர், சதி செய்கின்றனர். அதை நாங்கள் முறியடிப்போம், அவதூறுப் பிரசாரத்தை தவிடுபொடியாக்குவோம் என்றார் அவர்.
விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு நன்கொடை உள்ளிட்டவற்றை தங்களது மாஸ்டர் கார்டு, விசா கார்டு, பேபால் உள்ளிட்டவை மூலம் வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பல முன்னணி வங்கிகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.######################################


பிரிட்டனை சேர்ந்த சேனல் 5 டிவியின் 'ஃபிப்த் கியர்' மோட்டார் ஷோ நிகழ்ச்சிக்காக, உலகின் அதிவேக கார் கிராஷ் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது. இந்த கிராஷ் டெஸ்ட்டில் ஃபோர்டு ஃபோகஸ் காரை 190 கிமீ வேகத்தில் மோதி சோதனை நடத்தப்பட்டது.

அதிவேகமாக கார்களை மோதினால் ஏற்படும் விளைவுகளை குறித்து கார் டிரைவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த உலகின் அதிவேக கார் கிராஷ் டெஸ்ட்டை அந்த டிவி நிறுவனம் நடத்தியது.ஐரோப்பாவை சேர்ந்த யூரோ என்சிஏபி நிறுவனம் பொதுவாக கார்களை 65 கிமீ வேகத்தில் மோதி கிராஷ் டெஸ்ட் செய்வது வழக்கம். ஆனால், தற்போது அதைவிட மூன்று மடங்கு அதிகமான வேகத்தில், அதாவது 190 கிமீ வேகத்தில் காரை மோதச் செய்து கிராஷ் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடுங்க வைக்கும் இந்த கிராஷ் டெஸ்ட்டுக்காக ஃபோர்டு போகஸ் கார் பயன்படுத்தப்பட்டது. அந்த காரை இயக்குவதற்காக விஞ்ச் ஒன்று பொருத்தப்பட்டது. அந்த விஞ்ச் கான்கிரீட் தடுப்புச் சுவரின் மீது காரை இழுத்து வந்து மோதும் வகையில் காருடன் இணைக்கப்பட்டிருந்தது.இதைத்தொடர்ந்து, அந்த விஞ்சை எஞ்சினியர்கள் ஆன் செய்ததுதான் தாமதம், வெறும் 60 மில்லி செகண்ட்களில் அந்த கார் 190 கிமீ வேகத்தில் சீறி வந்து கான்கிரீட் தடு்ப்புச் சுவர் மீது மோதி அப்பளம்போல் நொறுங்கியது.

காரில் ஆட்கள் இல்லையென்றாலும், இந்த வேகத்தில் மோதினால் கார் என்னாகும் என்பதை நேரில் பார்த்த அவர்கள் சற்று அதிர்ச்சியில் உறைந்தது உண்மைதான். இதுகுறித்து யூரோ என்சிஏபி அமைப்பின் எஞ்சினியர் எல்லி பியர்சன் கூறுகையில்,"ஃபிப்த் கியர் நிகழ்ச்சிக்காக இந்த கார் டெஸ்ட் நடத்தப்பட்டதை பாராட்டுகிறேன். காரை அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்களுக்கு இந்த கார் கிராஷ் டெஸ்ட் நிச்சயம் ஒரு பாடமாக அமையும். மேலும், தற்போது மார்க்கெட்டில் அதிவேகமாக செல்லும் கார்கள் எண்ணிக்கை மலிந்து வருகிறது," என்று குறிப்பிட்டார்.

1 comment:

! ஸ்பார்க் கார்த்தி @ said...

அன்பு பதிவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எனது தளத்தை தரிசித்தமக்கு, நன்றி!!!!!!!!!!