ஜெயிப்பதற்கு திறமை இல்லாத இங்கிலாந்து அணி வீரர்கள் நம் வீரர்கள் மீது எகிறுகிறார்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரெய்னா, கோஹ்லி அதிரடியாக ஆட இந்தியா மீண்டும் வெற்றியை ருசித்தது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 3 போட்டியிலும் வென்ற இந்தியா தொடரை வென்றுள்ளது. 4வது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. ஒருமுனையில் கெய்ஸ்வெட்டர் அதிரடியாக ஆடிய நிலையில், இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து முதல் அதிர்ச்சி தந்தார். குக் (10) விக்கெட்டை வீழ்த்தினார். பிரவீன் பந்தில் கெய்ஸ்வெட்டர் (29) வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு டிராட், பீட்டர்சன் பொறுப்புடன் விளையாடினர். இவர்கள் 73 ரன் சேர்த்த நிலையில் டிராட் (39) வினய் குமார் வேகத்தில் வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து பீட்டர்சன் (41) அஸ்வின் சுழலில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பிரஸ்னன் மட்டும் போராடி 45 ரன் சேர்த்தார். 46.1 ஓவரில் அந்த அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின், அறிமுக வீரர் ஆரூண் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பட்டேல் 8, காம்பிர் 1, ரஹானே 20 ரன்னில் வெளியேறினர். அடுத்து ஜோடி சேர்ந்த ரெய்னா, கோஹ்லி இருவரும் கலக்கலாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இருவரும் அரைசதம் அடித்தனர். ரெய்னா 80 ரன் எடுத்த நிலையில் பின் பந்தில் ஆட்டமிழந்தார். 40.1 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி 86, தோனி 15 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4&0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
0 Comments