ஆப்பிள் ஸ்டீவ் ‌ஜாப்ஸ் காலமானார்




























கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார். புற்று‌நோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். அறிவாளிகளும் சாதனையாளர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இவருடைய மரணம் அமைந்துள்ளது.
1980ல் இவரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இதை தனது 21வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கி ஆப்பிள் கம்ப்யூட்டர் மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.

எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே. 2003ல் ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.

புதிய வரலாற்றைப் படைத்தது: 2007ல் ஐ‌ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது.

சி.இ.ஓ.க்களுக்கு முன்மாதிரி...


தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே விட்ட ஜாப்ஸ், தன்னுடைய பள்ளி நண்பரான ஸ்டீஃபன் வோஸ்னியாக்குடன் இணைந்து 1976-ல் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980 காலகட்டங்களில் இந்நிறுவனம் தயாரித்த மேக் கணினிகள் (Macintosh Computers) பிரபலம் அடைந்தன. 1985-ல் தனது தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.


மீண்டும் 1997-ல் ஐமேக் (iMac) என்ற புதிய கண்டுப்பிடுப்பு மூலம் அவர் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தை புதுப்பித்தார்.


கடந்த 2002-ல் ஐபாடு (iPod) என்ற வெளியீட்டின் வாயிலாக தொழில்நுட்பத்துறையில் புதுமையான புரட்சியினை ஏற்படுத்தினார்.


ஐபோன் (iPhone) எனும் புதிய படைப்பைத் தொடர்ந்து, நுண்ணறி பேசி (Smart Phone) சந்தையிலும் ஆப்பிள் நிறுவனம் கால்பதித்தது.


காலப்போக்கில் ஆப்பிள் தன் ஐபோன்களில் பல பதிப்புகளை (Versions) வெளியிட்டு தொழில்நுட்பச் சந்தையில் லாபம் கண்டது மட்டுமின்றி மகத்தான சாதனையும் படைத்தது.


சிலிகான் வேலியில் கால்பதித்து தொழில்நுட்ப செயற்களங்களில் (Technology Arena) புரட்சியை ஏற்படுத்தி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ்சின் இழப்பு, உலகளாவிய சமகால கணினித் துறையால் ஈடுசெய்ய முடியாதது.



இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். இவருடைய மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். இவருடைய மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒபாமா: அமெரிக்காவில் புதிய படைப்புகளை உருவாக்கி உலகில் சாதனை படைத்தவர்களில் ஸ்டீவ் ஜாப்ஸூம் ஒருவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தை துவங்கி இந்த உலகிற்கு மகத்தான சேவை செய்து நம்‌மை விட்டு பிரிந்துவிட்டார். மனித வரலாற்றில் அரிய சாதனை ப‌டைத்துள்ளார். மிகவும் அசாதாரணமான ஒரு மனிதரை இந்த உலகம் இழந்துவிட்டது என்றார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்: கம்ப்யூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்தி,உலகையே மாற்றி அமைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரை இந்த கம்ப்யூட்டர் உலகம் இழந்துவிட்டது என சமூக இணையதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறினார்.


அர்னால்டு இரங்கல்: கலிபோர்னியா மக்களின் கனவை நனவாக்கி தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார்.கம்ப்யூட்டர் உலகின் முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் என கலிபோர்னியா மாகாண கவர்னரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்டுஸ்வாஸ்னேக்கர் டுவீட்டர் இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments