கரூர் அருகே காவிரி ஆற்றில் நான்கு பேர் உயிரிழந்தனர்

கரூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 7 சிறார்கள் நீரில் மூழ்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஒரு சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மற்ற மூவரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாமக்கல் மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்த சிலர், கரூர் மாவட்டம் நன்னியூர் புதூர் என்ற கிராமத்தில் நடந்த திருவிழாவுக்காக வந்திருந்தனர். அப்போது சிறார்கள் 7 பேர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

காவிரியில் தற்போது தண்ணீர் அதிக அளவில்ஓடிக் கொண்டிருப்பதால் ஏழு பேரும் ஆற்றின் வேகத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தோர் வேகமாக ஓடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்புப் படையினருக்கும், போலீஸாருக்கும் தவகல் போய் அவர்களும் விரைந்து வந்தனர்.இதில், 3 சிறுவர்கள், ஒரு சிறுமி என நான்கு பேர் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. மற்ற 3 பேரையும் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

No comments: