நடிகை காந்திமதி காலமானார்

நடிகை காந்திமதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்த காந்திமதி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை வடபழனியில் வசித்துவந்தார்.

2000-ம் ஆண்டு இதயநோய் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காந்திமதி அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.

300-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறும் என்று அவரது மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.

16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் நடித்து புகழ்பெற்றார்.@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
3-வது இமெயில்: ஆமதாபாதில் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை
தில்லி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் அனுப்பியதாகக் கூறப்படும் இமெயில் மேற்குவங்கத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் அந்த இமெயில் அனுப்பப்பட்ட ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சி நடைபெற்று வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே தில்லி குண்டுவெடிப்பு சம்பந்தமாக வந்த 3-வது இமெயில் தெளிவில்லாமல் உள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

தெளிவில்லாமல் எண் குறியீட்டில் அனுப்பப்பட்டுள்ள அந்த இமெயிலில் ஆமதாபாதின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆமதாபாதி்ல் தாக்குதல் நடத்துவோம் என அந்த இமெயிலில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து குஜராத் முழுவதும் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு இதர மாநிலங்களையும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 comment:

மாய உலகம் said...

வருந்ததக்க விசயம்... நல்ல நடிகை ம்ம்ம்ம்ம்