ரூ.1 1/2 லட்சம் பணத்தை ரெயிலில் தவறவிட்ட தொழில் அதிபர்

சேலம் செவ்வாய் பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 52). வெள்ளி பட்டறைஅதிபர். இவர் வியாபார விஷய மாக ஆந்திரா மாநிலம் நெல்லூர் சென்றார். பின்னர் வியாபாரத்தில் வசூல் ஆன ரூ. 1 லட்சத்து 41 ஆயிரம் பணத்தை ஒரு பையில் போட்டு கொண்டு சேலம் திரும்பினார். டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். அந்த ரெயில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சேலம் ரெயில் நிலையம் வந்தது. அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த ராஜாராம் தூக்க கலக்கத்தில் பணப்பையை எடுக்க மறந்து இறங்கினார். பின்னர் வழக்கம்போல் வீட்டுக்கு செல்லபஸ்சை பிடிக்க சென்றுவிட்டார். பஸ்சில் ஏறும்போது பணப்பையைரெயிலில் தவறவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. இதையடுத்து தலையில் அடித்துக்கொண்டு ரெயில் நிலையத்துக்கு ஓடினார். ஆனால் அவர் செல்வதற்கு முன்பு அந்த ரெயில் ஈரோடு நோக்கி புறப்பட்டு சென்று விட்டது.அதிர்ச்சி அடைந்த அவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடன் சென்று நடந்த சம்பவத்தை கூறினார். உடனேஅவர்கள் இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சப்- இன்ஸ்பெக்டர் பவுன்சாமி, ரோஸ்லின் ஆகியோர் உஷாராயினர். அதிகாலை 5மணிஅளவில் அந்தரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்தது. உடனே போலீ சார் ராஜாராம் வந்த ரெயில்பெட்டியில் ஏறி அவர் சொன்ன அடையாளத்தின் படி பணப்பையை கைப் பற்றினர். இதனால் ஏதும் அறியாத பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பணப்பையை கைப்பற்றிய பின்னர்தான் அவர்களுக்கு விஷயம் தெரிந்தது. கெட்ட நேரத்திலும் ஒருநல்ல நேரம் இருந்ததால் ராஜாராமின் பணம் கிடைத்ததுபணத்தை மீட்ட தகவல் அறிந்த ராஜா ராம் நேராக ஈரோடு விரைந்து வந்தார். பின்னர் அவர் தவறவிட்ட ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார். அப்போது போலீசாருக்கு அவர் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Post a Comment

0 Comments