மரணத்திலிருந்து காப்பாற்ற மரணத்தை விலையாக கொடுத்த செங்கொடி



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்று கோரி காஞ்சிபுரம் தாலூகா அலுவலகம் எதிரே செங்கொடி (21) என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரிக்கையை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகள் செங்கொடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் பணியாற்றி வருகிறார்.



பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகம் எங்கும் பல்வேறு பேராட்டங்கள் நடத்து வருகின்றன.

இதே போன்று காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் செங்கொடி பங்கேற்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் வந்தார். கைப்பையுடன் வந்த செங்கொடி, பையில் வைத்திருந்த பெட்ரோல் கேன்களை வெளியே எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவி அதே இடத்தில் கருகி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மனோகரன் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் சிவகாஞ்சி போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

********************************************************************************

குற்றவாளிக்கு மனிதாபிமான அடிப்படையில் தூக்கு தண்டணையில் இருந்து விடுதலை வாங்கி தருவதற்கு தமிழ்நாடே முயற்சி செய்து கொண்டிருகிறது , இளம் பெண் தீக்குளித்து தனது உயிரை விட்டு இருக்கிறார் , இதனை படிக்கும்போது ஒரு பக்கம் பயங்கர கோபமும் , அழுகையும் ,தாங்கமுடியா சோகமும் வருகிறது , இன்னொரு பக்கம் யாரோ ஒருவர்க்காக அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவது இன்னும் நம் மக்களிடையே,மனிதம் செத்து விடவில்லை என்று திரும்பவும் ஒரு முறை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள் நம் மக்கள் , நம் யாரும் வேறு வேறு அல்ல , நம் எல்லோரும் ஒரே குடும்பம் என்ற நிம்மதியும் ,செங்கொடியின் மரணமும் மனதை அறுக்கிறது .

**********************************************************************************


தோழி செங்கோடியே நீ உனது உயிரை
கொடுத்துள்ளாய் , நீ கொடுத்த உயிரை
காப்பாற்ற தானே அனைவரின் போராட்டமும் ,
மனிதனின் உயிரை எடுக்கும் பொறுப்பு
மனிதனுக்கு கிடையாது என்றுதானே நம்
போராட்டம் ,பிறகு நீ
எப்படி உன் உயிரை கொடுத்தாய் போரட்டத்தின்
தீவிரத்தை அதிகப் படுத்த காந்தி தனது
உயிரை கொடுத்து இருந்தால் என்ன
ஆயிருக்கும் யோசித்து பார்த்தாயா !?
இனி யோசித்து என்ன செய்வது சகோதரியே !

தயவு செய்து யாரும் தனது உயிரை விலையாக வைத்து போராட வேண்டாம் !.........

கண்ணீருடன்
karurkirukkan.blogspot.com
????????????????????????

Post a Comment

0 Comments