சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் எறையூரில் வீடுகள் குலுங்கியது. மேலும் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் தலைவாசலில் நில அதிர்வால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
தலைவாசல், மும்முடி, தேவியாக்குறிச்சி, மணிவிழுந்தான் உள்ளிட்ட ஆத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்து அலறி அடித்துக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த நில அதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 3.9 புள்ளிகளாக பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது
சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த மாதம் இது போன்று நில அதிர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 2.9 ரிக்டர் அளவாக இருந்தது. இந்த முறை 3 ரிக்டர் அளவாக இருக்கும் என தெரிகிறது.
0 Comments