இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

அடுத்ததாக ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. முன்னதாக 3 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க இந்திய அணி முடிவு செய்திருந்தது. அதன்படி முதல் பயிற்சி ஆட்டம் நேற்று ஹோவ் நகரில் நடந்தது.
இதில் இந்திய அணி சக்செக்ஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய சக்செக்ஸ் அணி 236 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் சக்செக்ஸ் அணியை தோற்கடித்தனர்.டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து மோசமாக தோல்வியை சந்தித்து வந்த இந்திய அணி வெற்றியின் மூலம் உற்சாகம் அடைந்துள்ளது. நேற்று அனைத்து வீரர்களுமே சிறப்பாக ஆடினார்கள்.

ஆர்.பி.சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்திய வீரர்கள் பார்திவ்பட்டேல் 55 ரன்களும், விராட்கோக்லி 71 ரன்களும், ரோகித்சர்மா 61 ரன்களும் குவித்தனர்.இதே ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால் இந்திய அணி இனி வரும் ஆட்டங்களில் வெற்றியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஒரு நாள் தொடரையாவது எப்படியாவது கைப்பற்றி தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் கென்ட் அணியுடன் மோதுகின்றனர். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

No comments: